AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

திரைத்துறையில் நாயகனாக 36 ஆண்டுகளை நிறைவு செய்த விக்ரம்… கொண்டாடும் ரசிகர்கள்

36 Years Of Vikram | தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். இவர் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகி இன்றுடன் 36 ஆண்டுகள் நிறைவடைந்ததை திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கொண்டாடி வருகின்றனர்.

திரைத்துறையில் நாயகனாக 36 ஆண்டுகளை நிறைவு செய்த விக்ரம்… கொண்டாடும் ரசிகர்கள்
விக்ரம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 17 Oct 2026 17:53 PM IST

தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வந்தாலும் இவருக்கு தென்னிந்திய மொழிகளில் அதிக அளவில் ரசிகர்களின் எண்ணிக்கை உள்ளது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரமை கொண்டாடுவது போல மலையாள சினிமா ரசிகர்களும் விக்ரமை கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது. இவர் சினிமாவில் டப்பிங் ஆர்ட்டிஸ்டாக பல ஆண்டுகள் பணியாற்றி பிறகு சின்னத்திரையில் பணியாற்றி வந்த நிலையில் கடந்த 1990-ம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். அதன்படி நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த 17-ம் தேதி அக்டோபர் மாதம் 1990-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியானது என் காதல் கண்மனி.

இயக்குநர் டி.ஜே.ஜாய் எழுதி இயக்கிய இந்தப் படம் ரொமாண்டிக் பானியில் வெளியாகி உள்ளது. மேலும் இந்தப் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார் நடிகர் விக்ரம். இந்த நிலையில் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 36 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இவர் சினிமாவில் அறிமுகம் ஆகி 36 ஆண்டுகள் ஆகி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

திரைத்துறையில் நாயகனாக 36 ஆண்டுகளை நிறைவு செய்த விக்ரம்:

தொடர்ந்து தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி நடிகர் விக்ரம் மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் தொடர்ந்து படங்களில் நடித்து உள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று விக்ரம் சினிமாவில் நாயகனாக 36 ஆண்டுகளை நிறைவு செய்ததை திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Also Read… வெளியானது துல்கர் சல்மானின் ஆகாசம்லோ ஒக தாரா படத்தின் டீசர்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்… அதிர்ச்சியில் திரையுலகினர்!

Follow Us