Jailer 2: இன்றைக்கும் என்றைக்கும் ஒரு தலைவன்தான்…. ஜெயிலர் 2 படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடிகளா?
Jailer 2 First Day Collections: தென்னிந்திய சினிமாவில் 2026ம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டுவந்த திரைப்படங்களில் ஒன்றுதான் ஜெயிலர் 2. இந்த படமானது நேற்று (15/10/2026) உலகமெங்கும் வெளியாகியிருந்தது. முதல் நாள் முடிவில் இந்த படமானது எவ்வளவு வசூல் செய்துள்ளது என இணையத்தில் தகவல்கள் வெளியாகிவருகிறது.
தமிழ் பிரம்மாண்ட இயக்குநரான நெல்சன் திலீப்குமாரின் (Nelson Dilipkumar) இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth) நடித்திருந்த புத்தம் புதிய திரைப்படம்தான் ஜெயிலர் 2 (Jailer 2). இந்த படமானது கடந்த 2023ம் ஆண்டில் வெளியாகியிருந்த ஜெயிலர் படத்தின் தொடர்ச்சியான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க, அவருடன் ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன், சிவராஜ்குமார் (Shivaraj Kumar), மோகன்லால் (Mohanlal), சுராஜ் வெஞ்சாரமூடு உள்ளிட்ட பல்வேறு நடிகர்களும் முக்கியமான வேடத்தில் இணைந்து நடித்திருந்தனர். ஜெயிலர் 2 படமானது பிரம்மாண்டமான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு மக்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்துவருகிறது.
நேற்று (15/10/2026) இப்படமானது உலகமெங்கும் வெளியான நிலையில், முதல் நாளில் செய்த வசூல் குறித்து தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது. இந்த படமானது முதல் நாள் முடிவில் உலகமெங்கும் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?.




இதையும் படிங்க: பிரிட்டிஷ் காலப் பின்னணியில்… விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகாவின் ரணபாலி திரைப்படம் எப்படி இருக்கு? – விமர்சனங்கள் இதோ
ஜெயிலர் 2 படத்தின் முதல் நாள் உலகளாவிய வசூல் விவரம்:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படமானது வெளியாகிய முதல் நாளிலே சிறப்பான வரவேற்பை பெற்றுவந்தது. இப்படத்திற்கு மக்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்கள் இருந்துவரும் நிலையில், இப்படமானது மாபெரும் வெற்றியை பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதில் தமிழ் முதல் பாலிவுட் சினிமா பிரபலங்கள் பலரும் இணைந்து நடித்துள்ளனர்.
இதையும் படிங்க: அது எங்களுக்கு பெருமைக்குரிய விசயம்… ஓம் பட தயாரிப்பாளர் ஓபன் டாக்
அந்த விதத்தில் இந்த படமானது முதல் நாள் முடிவில் உலகமெங்கும் ரூ 125.25 கோடிகளை வசூல் செய்துள்ளதாம். அதில் இந்தியாவில் ரூ 70.25 கோடிகளும், வெளிநாடுகளில் கிட்டத்தட்ட ரூ55 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து படக்குழு எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்புகளையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயிலர் 2 படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:
Patthikkum Ettuth Thikkum, Avan Per Sonnaa! 🌟
Witness the MEGA BLOCKBUSTER #Jailer2 in theatres near you!#Jailer2 Rampage in theatres worldwide
@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @vidya_balan @iam_SJSuryah #MithunChakraborty #SurajVenjaramoodu @meramyakrishnan @iYogiBabu @mirnaaofficial @vijaykartikdop @Nirmalcuts @ChethanDsouza @AlwaysJani @KiranDrk @sunilreddy22 #PallaviSingh @valentino_suren @Alagiakoothan #SantoshRaju @kabilanchelliah @kuchirayar73 @RIAZtheboss
— Sun Pictures (@sunpictures) October 16, 2026
தற்போது இந்த ஜெயிலர் 2 படத்திற்கு மக்கள் மத்தியில் மாபெரும் பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்துவருகிறது. அந்த விதத்தில் இந்த படமானது நிச்சயமாக பான் இந்திய வெற்றியை பெரும். முதல் நாளிலே ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ள நிலையில், ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு மேலும் அதிக வசூலை பெரும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.