AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Kamal Haasan: எனதருமை நண்பர்… ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்திற்கு வாழ்த்து சொன்ன கமல்ஹாசன்!

Kamal Haasan Congratulates Rajinikanth: சினிமாவில் உலகநாயகன் என ரசிகர்களால் போற்றப்படுபவர் கமல்ஹாசன். இவர் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக படங்களில் பணியாற்றிவருகிறார். அந்த விதத்தில் இன்று (15/10/2026) சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படமானது வெளியாகியுள்ள நிலையில், அதை வாழ்த்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவை பகிர்ந்துள்ளார்.

Kamal Haasan: எனதருமை நண்பர்… ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்திற்கு வாழ்த்து சொன்ன கமல்ஹாசன்!
ரஜினி ஜெயிலர் 2 படத்திற்கு கமல் வாழ்த்து தெரிவித்துள்ளார்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 15 Oct 2026 20:59 PM IST

பான் இந்திய சினிமாவிலே பிரபலமான நட்சத்திர நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் உலகநாயகன் கமல்ஹாசன் (Kamal Haasan). இவர் சினிமாவில் வெறும் நடிகராக அமட்டுமல்லாமல், தயாரிப்பாளர், இயக்குநர், பாடகர் மற்றும் எழுத்தாளர் என பல்வேறு பணிகளை சிறப்பாக செய்துவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக தக் லைஃப் (Thug Life) என்ற திரைப்படமானது வெளியாகியிருந்த நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பிறகு அவர் தொடர்ந்து புதிய படங்களிலும் பணியாற்றிவருகிறார். மேலும் அரசியலிலும் ஒருபுறம் தனது பணியை சிறப்பாக செய்துவருகிறார். அந்த விதத்தில் இன்று (15/10/2026) இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் (Nelson Dilipkumar) இயக்கத்திலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின்(Superstar Rajinikanth) நடிப்பிலும் ஜெயிலர் 2 (Jailer 2) திரைப்படமானது பான் இந்திய மொழிகளில், உலகமெங்கும் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை பல்வேறு தமிழ் நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்திவருகிறார்கள். அந்த விதத்தில் ரஜினியின் நண்பரும், நடிகருமான உலகநாயகன் கமல்ஹாசன் ஜெயிலர் 2 படத்தை வாழ்த்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தலைவரு நிரந்தரம்… ஜெயிலர் 2 படத்தின் FDFS காட்சியை பார்த்து வாழ்த்திய தமிழ் பிரபலங்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தை வாழ்த்தி கமல்ஹாசன் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இந்த பதிவில் நடிகர் கமல்ஹாசன், “எனதருமை நண்பர் சூப்பர் சுற்ற ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான ஜெயிலர் 2 படமானது, உலகமெங்கிலும் ஹிட் என்று தகவல் வந்துள்ளது. நண்பருக்கும், இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் காம்போ:

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவருமே இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை ஜெயிலர் பட இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்க, ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமானது தயாரிக்கவுள்ளது. இதில் அனிருத் தான் இசையமைக்கவுள்ள நிலையில், இந்த படத்தின் அறிவிப்புகள் பல மாதங்களுக்கு முன் வெளியாகியிருந்தது.

இதையும் படிங்க: இன்னும் 50 நாட்களில்.. நாக சைதன்யாவின் விருஷகர்மா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அந்த விதத்தில் ஜெயிலர் 2 படம் வெளியாகிவிட்ட நிலையில், இனிமேல் KHxRK படத்தின் பணியை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தொடங்குவர் என கூறப்படுகிறது. ஆனால் ரஜினி மற்றும் கமல் வெவ்வேறு படங்களில் பிசியாக நடித்துவரும் நிலையில், இந்த இருவருக்கும் எப்போது சரியான நேரம் கிடைக்குமோ அப்போதே இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என கூறப்படுகிறது.

Follow Us