AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Jailer 2: தலைவரு நிரந்தரம்… ஜெயிலர் 2 படத்தின் FDFS காட்சியை பார்த்து வாழ்த்திய தமிழ் பிரபலங்கள்!

Jailar 2 Film FDFS Reactions: தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திர நாயகனாக இருந்துவருபவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவரின் நடிப்பில் இன்று (15/10/2026) ஜெயிலர் 2 படமானது மிக பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. இப்படத்தின் FDFS காட்சியை பார்த்து பாராட்டிய பிரபலங்கள் குறித்து விவரமாக பார்க்கலாம்.

Jailer 2: தலைவரு நிரந்தரம்… ஜெயிலர் 2 படத்தின் FDFS காட்சியை பார்த்து வாழ்த்திய தமிழ் பிரபலங்கள்!
ஜெயிலர் 2-ஐப் பாராட்டிய தமிழ் பிரபலங்கள்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 15 Oct 2026 16:05 PM IST

2026ம் ஆண்டில் ஒட்டுமொத்த கோலிவுட் சினிமாவே காத்திருந்த பிரம்மாண்டமான திரைப்படம்தான் ஜெயிலர் 2 (Jailer 2). சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் (Superstar Rajinikanth) 172வது திரைப்படமாக இந்த படமானது உருவான நிலையில், இன்று (15/10/2026) உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் FDFS காட்சிகள் தமிழகத்தில் காலை 8:30 முதல் தொடங்கிய நிலையில், மிகவும் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டிருந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருந்த இப்படத்தில், பல்வேறு நட்சத்திர பிரபலங்களும் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar) இயக்கியிருந்த நிலையில், சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் கலாநிதிமாறன் தயாரித்துள்ளார்.

இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் (Anirudh) இசையமைத்திருந்த நிலையில், பின்னணி இசை மற்றும் பாடல்கள் மிகவும் பிரம்மாண்டமாக அமைந்திருந்தது. இன்று இந்த திரைப்படமானது உலகமெங்கும் வெளியாகியுள்ள நிலையில், தமிழில் பல்வேறு நட்சத்திர நடிகர்களும் திரையரங்குகளில் FDFS காட்சிகளை பார்த்து கொண்டாடியுள்ளனர்.

இதையும் படிங்க: இந்த ஜெனரேஷனின் ஆக்ஷன் ஹீரோ.. சிவகார்த்திகேயனை புகழ்ந்த வித்யுத் ஜாம்வால்!

ஜெயிலர் 2 படத்தின் FDFS காட்சியை பார்த்த தனுஷ் பகிர்ந்த பதிவு:

ஜெயிலர் 2 படத்தின் முதல் நாள் முதல் காட்சியை இன்று (15/10/2026) சென்னை ரோகிணி திரையரங்கில் தனுஷ் பார்வையிட்டிருந்தார். இது குறித்து, படம் பார்த்த அனுபவம் குறித்தும் தனது எக்ஸ் பக்கத்தில் தனுஷ் பதிவை வெளியிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன் ஜெயிலர் 2 படத்தை பார்வையிட்டது குறித்து வெளியான எக்ஸ் பதிவு:

ஜெயிலர் 2 படத்தின் FDFS காட்சியை நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பாக கண்டுகளித்துள்ளார். அது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் சிறப்பான பதிவையும் பகிர்ந்துள்ளார்.

ஜெயிலர் 2 படத்தின் FDFS காட்சியை திரையரங்கில் பார்த்த சூரி:

தலைவர் படத்தின் முதல் நாள் முதல் காட்சி, அந்த சந்தோஷமே தனி என ஜெயிலர் 2 படத்தை பார்த்த அனுபவம் குறித்து நடிகர் சூரி பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: ரசிகர்களை கவர்ந்ததா? ஜெயிலர் 2 படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம் இதோ

ஜெயிலர் 2 படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்த பிரபலங்கள்:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படமானது இன்று (15/10/2026) உலகமெங்கும் வெளியாகியுள்ளது. அந்த விதத்தில் இப்படத்தை பல்வேறு தமிழ் பிரபலங்களும் திரையரங்குகளில் சென்று பார்வையிட்டுள்ளனர். நடிகர் தனுஷ், சிவகார்த்திகேயன், சூரி, கார்த்திக் சுப்புராஜ், ரிஷிகாந்த், சனந்த், கென் கருணாஸ் மற்றும் இயக்குநர் அஜய் ஞானமுத்து உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் பார்வையிட்டு பிரம்மாண்டமாக இருப்பதாக வாழ்த்தி தங்களின் சமூக ஊடகங்களில் பதிவுகளை வெளியிட்டுவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us