ஜெயிலர் 2 படத்தின் FDFS காட்சியைப் பார்த்த ஓஜி ஃபேன் பாய் தனுஷ் – வைரலாகும் போட்டோஸ்!
Dhanush watching FDFS Show of Jailer 2 | தமிழ் சினிமாவில் உருவாகி இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ள படம் ஜெயிலர் 2. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான இந்தப் படத்தை சாதாரண மக்கள் மட்டும் இன்றி பிரபலங்களும் ஆர்வத்துடன் திரையரங்குகளுக்கு சென்று பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் (Actor Dhanush). இவரது நடிப்பில் அடுத்தடுத்துப் படங்கள் பான் இந்திய மொழிகளில் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் கைவசம் பலப் படங்களை வைத்துக்கொண்டு பிசியான நாயகனாக வலம் வருகிறார் நடிகர் தனுஷ். இந்த நிலையில் நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது ஓம் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற உள்ளது. இந்தப் படம் வருகின்ற 20-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. முன்னதாக படம் நாளை 16-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்று ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படம் வெளியாவதால் படத்தின் வெளியீட்டை ஒத்திவைப்பதாக தனுஷ் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் முன்னணி பிரபலங்கள் பலர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்களாக உள்ளனர். அதனைப் பலரும் பல இடங்களில் வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். அதில் ஓஜி ஃபேன் பாயாக வலம் வருபவர் தான் நடிகர் தனுஷ். இவர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்வதற்கு முன்பும் சரி அவருடன் விவாகரத்து ஆன பிறகும் சரி ஒரு ஃபேன் பாயாக வலம் வருவதை எந்த இடத்திலும் மாற்றவில்லை என்றே கூறவேண்டு.




ஜெயிலர் 2 படத்தின் FDFS காட்சியைப் பார்த்த ஓஜி ஃபேன் பாய் தனுஷ்:
தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் எப்போது திரையரங்குகளில் படம் வெளியானாலும் முதல் நாள் முதல் காட்சியை தவறவிடாமல் பார்க்கும் தனுஷ் இன்று ரஜினிகாந்த் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி உள்ள ஜெயிலர் 2 படத்தையும் முதல் காட்சியே சென்று பார்த்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
திருச்செந்தூர்ல முருகர்! 🙏
ஒப்பிலியப்பன்ல பிள்ளையார்! 🙏
ROHINI la JAILER! 🔥🔥THE OG SUPERSTAR. THE ONE & ONLY THALAIVAR! 😎👑
A STAR-STUDDED FDFS for the BIGGEST STAR of them all at #FansFortRohini ! 🌟💥
@sunpictures @rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial
@dhanushkraja
— Rohini SilverScreens (@RohiniSilverScr) October 15, 2026
Also Read… பிக்பாஸில் வைரத்தை திருடி மாட்டிக்கொண்ட முனியம்மாள் – வைரலாகும் வீடியோ