ஊரே துணை இருக்கு எனக்கிங்கு வேறு உறவெதுக்கு? 20 ஆண்டுகளைக் கடந்து நடிகர் சிம்புவின் வல்லவன் படம்!
20 Years Of Vallavan Movie | தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன். இவரது நடிப்பில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் வல்லவன் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் தற்போது அரசன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது. அது மட்டும் இன்றி சிம்புவின் நடிப்பில் அடுத்தடுத்து உருவாகும் படங்கள் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் சிம்பு குழந்தை நட்சத்திரமாக இருந்த போதே ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வந்தவர் சிலம்பரசன். இவரது நடிப்பில் முன்னதாக வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் வல்லவன்.
படம் கடந்த 2006-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. மேலும் இந்தப் படத்தை நடிகர் சிலம்பரசனே எழுதி இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனை ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்.




20 ஆண்டுகளைக் கடந்து நடிகர் சிம்புவின் வல்லவன் படம்:
இந்தப் படத்தில் நடிகர் சிலம்பரசனுக்கு இரண்டு நாயகிகள் ஜோடியாக இருந்தனர். அதன்படி நடிகை நயன்தாரா மற்றும் ரீமாசென் ஆவர். அதனைத் தொடர்ந்து இவர்களுடன் இணைந்து நடிகர்கள் சந்தானம், சந்தியா, பிரேம்ஜி, சத்யன், ஜானகி சபேஷ், எஸ்.வி.சேகர், சங்கர், தாரா சீனிவாசன், கார்த்திக் சபேஷ், வேணு அரவிந்த், தீபா வெங்கட், செம்புலி ஜெகன், கொட்டாச்சி, குகன் சண்முகம் மற்றும் ராஜேந்திரநாத் என பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
Also Read… Lokesh Kanagaraj : அப்டேட் விரைவில்.. அல்லு அர்ஜுனின் AA23 படம் குறித்து லோகேஷ் கனகராஜ் பதிவு!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
20 years later, #Vallavan still has a craze of its own ❤️🔥
#20YearsOfVallavan https://t.co/eTE3mQYz2d
— Sony Music South India (@SonyMusicSouth) October 13, 2026
Also Read… கல்கி 2 படப்பிடிப்பில் இணையும் நடிகை சாய் பல்லவி? வைரலாகும் தகவல்