விறுவிறுப்பாக நடைபெறும் அரசன் படத்தின் ஷூட்டிங்… வைரலாகும் அப்டேட்!
Arasan Movie Shooting Update | தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன். இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் அரசன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு குறித்த அப்டேட் தற்போது வெளியாகி தொடர்ந்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் தற்போது உருவாகி வரும் படம் அரசன். இந்தப் படத்தினை இயக்குநர் வெற்றிமாறன் எழுதி இயக்கி வருகிறார். இவரது இயக்கத்தில் முன்னதாக தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் இந்த அரசன் படமும் நல்ல வரவேற்பைப் பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இந்த அரசன் படத்தின் படப்பிடிப்பு கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பூஜையுடன் தொடங்கியது. படத்தின் படப்பிடிப்பு தொடங்கி ஒரு ஆண்டை எட்டியுள்ள நிலையில் படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் படத்தின் ஷூட்டிங் தொடர்பான அப்டேட்களும் அவ்வபோது வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகின்றது.




விறுவிறுப்பாக நடைபெறும் அரசன் படத்தின் ஷூட்டிங்:
அந்த வகையில் சென்னையின் திருவொற்றியூரில் சிலம்பரசனின் அரசன் திரைப்படத்தின் குறுகிய கால படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அதேவேளையில், கென் கருணாஸ் நடிக்கும் ‘ராஜன் வகையறா’ படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. வட சென்னை திரைப்படத் தொடரின் ஒரு பகுதியாக அமையும் இவ்விரு படங்களுக்கும் இடையே தொடர்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தப் செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… Vishnu Vishal: விஷ்ணு விஷால் – மமிதா பைஜூவின் இரண்டு வானம் படம் அதிகாரப்பூர்வமாக ஒத்திவைப்பு!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Arasan shoot happening in Tiruvottiyur, Chennai, for a short schedule with #STR. #RaajanVaagaira starring #KenKarunas is also shooting simultaneously. It’s being said that the 2 movies in the #VadaChennai franchise will have connections within them. 👀🔥
A #Vetrimaaran CINEMATIC UNIVERSE 🌎💥
— Movies Singapore (@MoviesSingapore) October 10, 2026
Also Read… Bigg Boss 10: பிக் பாஸில் குழந்தை போல பேசிய டிடிஎப் வாசன்.. கலாய்த்த விஜய் சேதுபதி!