AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Rathna kumar: டபுள் ஃபன்.. டபுள் ரோமேன்ஸ்.. ரத்னகுமார் இயக்கத்தில் மீண்டும் உருவாகும் மேயாத மான் 2 – அறிவிப்பு!

Meyaadha Maan 2 Movie: தமிழ் சினிமாவில் சிறந்த எழுத்தாளராகவும், இயக்குநராகவும் மிகவும் பிரபலமானவர் ரத்னகுமார். இவர் இறுதியாக 29 என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜுடன் AA23 படத்தில் எழுத்தாளராக பிசியாக இருந்த நிலையில், தற்போது மேயாத மான் 2 படத்தை இயக்குநராக இயக்கவுள்ளார்.

Rathna kumar: டபுள் ஃபன்.. டபுள் ரோமேன்ஸ்.. ரத்னகுமார் இயக்கத்தில் மீண்டும் உருவாகும் மேயாத மான் 2 – அறிவிப்பு!
ரத்ன குமாரின் மேயாத மான் 2 திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 28 Nov 2026 20:43 PM IST

கோலிவுட் மக்கள் மத்தியில் பிரபலமான ஒருவராக இருந்துவருபவர் இயக்குநர் ரத்னகுமார் (Director Rathnakumar). இவர் தமிழ் சினிமாவில் வெறும் இயக்குநராக இல்லாமல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) முதல் முதல்வர் விஜய் (CM Vijay) உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்திருந்த படங்களில் எழுத்தாளராக பணியாற்றியுள்ளார். இவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் (Lokesh Kanagaraj) நெருங்கிய நண்பர் என்ற நிலையில், அவரின் இயக்கத்தில் உருவாகும் பிரம்மாண்ட படங்களில் எழுத்தாளராக பணியாற்றிவருகிறார். இறுதியாக ரஜினிகாந்த் நடித்திருந்த கூலி படத்திலும் எழுத்தாளராக பணியாற்றியிருந்தார். இயக்குநராக இவரின் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் 29 தி பிலிம் (29 The Film). 2026ம் ஆண்டு தொடக்கத்தில் நடிகர் விது மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி இந்த படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

இப்படத்தின் வெற்றிக்கு பின் மீண்டும் இயக்குநராக புதிய படத்தை இயக்கும் பணியில் ரத்னகுமார் இணைந்துள்ளார். 2017ம் ஆண்டில் ரத்னகுமாரின் இயக்கத்தில் முதல் படமாக அமைந்த மேயாத மான் (Meyaadha Maan) படத்தின் தொடர்ச்சியாக மேயாத மான் 2 திரைப்படமானது (Meyaadha Maan 2 Movie) உருவாக்கப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: அஜித்தின் ரசிகர்களுக்காக மாஸ் காட்சி.. டேர் டெவில் படத்தில் சர்ப்ரைஸான சம்பவம் செய்த இயக்குநர்!

இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகும் மேயாத மான் 2:

இயக்குநர் ரத்னகுமார் சினிமாவில் இயக்குநராக இயக்கிய முதல் திரைப்படம் மேயாத மான். இதில் வைபவ் மற்றும் ப்ரியா பவானி சங்கர் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது 2017ம் ஆண்டில் வெளியாகியிருந்த நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் வெற்றியை அடுத்ததாக கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு பிறகு மேயாத மான் 2 திரைப்படம் தொடர்ச்சியாக உருவாகாவுள்ளதாம்.

இதையும் படிங்க: ஸாம்பீ பராக்… சந்தானத்தின் லவ் பைட் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இதை லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனம் மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறதாம். இப்படத்திலும் நடிகர்கள் வைபவ், பிரியா பவானி சங்கர், இந்துஜா மற்றும் விவேக் பிரசன்னா இணைந்து நடிக்கிறார்களாம்.

மேயாத மான் 2 திரைப்படம் உருவாகுவது குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இயக்குநர் ரத்னகுமார் தற்போது லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகவுள்ள AA23 படத்தில் எழுத்தாளராக பணியாற்றிவருகிறார். இன்னும் இப்படத்தின் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், இதை முழுவதுமாக முடித்தபிறகு மேயாத மான் 2 படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் வரும் 2027ம் ஆண்டு இறுதியில் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

Follow Us