AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மனைவி அளித்த பரபரப்பு புகார் – அமைச்சர் வெங்கடரமணன் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

Domestic Violence Case : குடும்ப வன்முறை புகார் தொடர்பான வழக்கு நவம்பர் 28, 2026 இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, அமைச்சர் வெங்கடரமணன் நேரில் ஆஜராகாகவில்லை என கூறப்படுகிறது., இதனையடுத்து வழக்கை வருகிற டிசம்பர் 5, 2026 அன்று அமைச்சர் வெங்கடரமணன் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

மனைவி அளித்த பரபரப்பு புகார் –  அமைச்சர் வெங்கடரமணன் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
அமைச்சர் வெங்கட்ரமணன்
Karthikeyan S
Karthikeyan S | Published: 28 Nov 2026 20:10 PM IST

சென்னை, நவம்பர் 28 : குடும்ப வன்முறை தொடர்பான வழக்கில் உணவுத் துறை அமைச்சர் வெங்கட்ரமணன் (Minister VenkatRamanan) நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் மீது அவரது மனைவி மீனாட்சி கடந்த ஏப்ரல், 2026 மாதம் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தனது கணவர் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், குழந்தைகளிடம் இருந்து தன்னை பிரித்துவிட்டதாகவும் புகார் தெரிவித்திருந்தார்.

அமைச்சரின் மனைவி அளித்த பரபரப்பு புகார்

இந்த நிலையில் தனது புகார் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என, சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் மீனாட்சி வழக்கு தொடர்ந்தார். அதில், அமைச்சர் வெங்கடரமணன் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், அமைச்சராக இருப்பதால் காவல் துறை நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள். மேலும், குழந்தைகளை தன்னுடன் இருக்க அனுமதிக்க வேண்டும், அதுவரை தனக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க : திருப்பரங்குன்றம் விவகாரம் – அரசு சரியாக கையாளவில்லை… முதல்வர் விஜய் பேச வேண்டும்… அண்ணாமலை கண்டனம்

அமைச்சர் வெங்கட்ரமணன் நேரில் ஆஜராக உத்தரவு

இந்த வழக்கு நவம்பர் 28, 2026 இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, அமைச்சர் வெங்கடரமணன் நேரில் ஆஜராகாத நிலையில், வழக்கை வருகிற டிசம்பர் 5, 2026 தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். அன்றைய தினம் அமைச்சர் வெங்கடரமணன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சரின் மனைவி மீனாட்சி, “கடந்த 2026 ஏப்ரல் மாதம் தமிழ்நாடு முதல்வர் விஜய் ஆட்சிப் பொறுப்பேற்பதற்கு முன்பு நடிகர் விஜயின் கணக்காளராக பணியாற்றிய வெங்கட்ரமணன் மீது சென்னை பெருநகர காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். இந்த நிலையில் அந்த புகார் தொடர்பாக இது நாள் வரையிலும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மாறாக மூன்றாவது குழந்தையை கலைத்து விட்டு வீட்டிற்கு வந்தால் சேர்த்துக் கொள்வேன் என கூறி என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பினார்கள்.

ஆனால் கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் கடந்து நிலையிலும் என்னை இதுவரை யாரும் அழைத்துப் பேசவில்லை. மாறாக வெங்கட்ரமணன் அமைச்சராக பொறுப்பேற்ற பின்னரும் நான் அவரை தொடர்பு கொண்டு பேச முற்பட்டேன். ஆனால் அவர் என்னிடம் பேச மறுத்து விட்டார். எனவே எனது குழந்தைகளை காண்பிக்க வேண்டுமென செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஏற்கனவே ஒரு வழக்கு தொடுத்துள்ளேன். தற்போது நான் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் காரணத்தினால் எனது வாழ்வாதாரத்திற்காக ஜீவனாம்சம் கேட்டு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தேன்.

இதையும் படிக்க : Tamil Nadu Weather forecast: தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை மையம் தகவல்

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் அமைச்சர் நேரில் ஆஜராகாததால் வருகின்ற டிசம்பர் 5, 2026 வழக்கை தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அமைச்சர் வெங்கட்ரமணன் மற்றும் அவரது தாயார் எனக்கு அதிக கொடுமை செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

Follow Us