AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

திருப்பரங்குன்றம் விவகாரம் – அரசு சரியாக கையாளவில்லை… முதல்வர் விஜய் பேச வேண்டும்… அண்ணாமலை கண்டனம்

Thiruparankundram Deepam Issue : செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, திருப்பரங்குன்றம் விவகாரத்தை அரசு சரியாக கையாளவில்லை. பதற்றத்தில் திருப்பரங்குன்றம் தீபம் நிகழ்வு நடைபெறுகிறது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முதல்வர் விஜய்யை தவறாக வழிநடத்தியுள்ளனர். இந்த விவகாரம் குறித்து முதல்வர் விஜய் பேச வேண்டும் என்றார்.

திருப்பரங்குன்றம் விவகாரம் – அரசு சரியாக கையாளவில்லை… முதல்வர் விஜய் பேச வேண்டும்… அண்ணாமலை கண்டனம்
முதல்வர் விஜய் - அண்ணாமலை
Karthikeyan S
Karthikeyan S | Published: 28 Nov 2026 16:13 PM IST

மதுரை, நவம்பர் 28 : உச்சநீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் நவம்பர் 25, 2026 இன்று மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், தீபத்தூண் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த வீ தி லீடர்ஸ் என்ற அமைப்பின் தலைவர் அண்ணாமலை  (Annamalai), முதல்வர் திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து பேச வேண்டும் என தெரிவிததுள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த வீ தி லீடர்ஸ் அமைப்பின் அண்ணாமலை பேசியதாவது, “திருப்பரங்குன்றம் விவகாரத்தை அரசு சரியாக கையாளவில்லை. பதற்றத்தில் திருப்பரங்குன்றம் தீபம் நிகழ்வு நடைபெறுகிறது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முதல்வர் விஜய்யை தவறாக வழிநடத்தியுள்ளனர். திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து முதல்வர் விஜய் பேச வேண்டும். அரசியல் தலைவர்களின் கருத்து திருப்பரங்குன்றம் அமைதியை சீர்குலைக்க கூடாது என தெரிவித்தார்.

இதையும் படிக்க : “திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் இன்று மாலை 5 மணிக்குத் தீபம்”.. நீதியரசர் வைத்தியநாதன் உறுதி!!

கொண்டாட்டத்திற்கு எதிராக கண்டனம்

 

மேலும் பேசிய அவர், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ஒரு தரப்பு கொண்டாடுவதற்கு ஒன்றுமில்லை. தேவையில்லாமல் அமைப்புகள் கொண்டாடுவது, தமிழ்நாடு போலீஸிற்கு அல்வா கொடுக்கும் செயல்பாடுகள் தேவையற்றது. இது கலவரத்திற்கு கொண்டு செல்லும் என தெரிவித்தார். மேலும் பேசிய அவர், முகாந்திரம் இல்லாமல் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ.,வை கைது செய்திருக்க முடியாது. எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் தவறு. எம்எல்ஏ ராஜினாமா செய்யாமல் இருப்பதும் தவறு. இதை தமிழக வெற்றி கழகம் செய்திருக்க வேண்டும்; ஆனால் செய்யவில்லை என்றார்.

நயினார் நாகேந்திரன் விளக்கம்

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், “பாஜகவினர் யாரும் திருப்பரங்குன்றம் மலைக்கு அருகில் கூட போக மாட்டோம். தூரத்தில் இருந்தே கண்கொள்ளா காட்சியை பார்க்க வேண்டும் அவ்வளவுதான். வேற எந்த நோக்கமும், எண்ணமும் கிடையாது. தீபம் ஏற்றும்போது 10 அல்லது 50 பேர் போகிறார்கள். மலை மீது செல்ல வசதி இல்லை; யாரும் மலை மீது செல்லக்கூடாது என கேட்டுக்கொள்கிறேன். உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மனமார்ந்த நன்றி. நியாயமான தீர்ப்புக்கு நன்றி. வருகின்ற காலங்களில் அது எப்படி இருக்கும் என பார்ப்போம் என்றார்.

இதையும் படிக்க : தொகுதி மறுவரையறை ஆதரவு.. “தமிழிக உரிமையை காப்பாற்றியுள்ளோம்”.. மு.க.ஸ்டாலின் விளக்கம்!!

கோயிலுக்கு வந்த நீதிபதிகள்!

இதனையடுத்து நவம்பர் 28, 2026 இன்று மாலை 5 மணியளவில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து தீபம் ஏற்றும் நிகழ்வை கணிக்க திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு வந்த ஓய்வு பெற்ற நீதிபதிகள் வருகை தந்துள்ளனர். மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணாவும் கோயிலுக்கு வருகை தந்துள்ளார்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், அதில் பங்கேற்க வந்த இந்து அறநிலையத்துறை அதிகாரிகளை CRPF வீரர்கள் தடுத்து நிறுத்தினர்.மலைக்குச் செல்ல 50 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், பக்தர்கள் அனைவரும் கீழே இறங்குமாறு வலியுறுத்தினர். மேலும் தங்களை அவர்கள் அறிமுகம் செய்த பிறகு, அறநிலையத்துறையினர் அனுமதிக்கப்பட்டனர். மீறி திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்றுவதை காண மலை உச்சிக்குச் சென்ற பக்தர்களை கீழே இறங்குமாறு CRPF வீரர்கள் அறிவுறுத்தினர்

Follow Us