AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Santhanam: ஸாம்பீ பராக்… சந்தானத்தின் லவ் பைட் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Love Bite Movie Release Date: தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமான நகைச்சுவை நடிகராக இருந்து, சினிமாவில் ஹீரோவாக கலக்கிவருபவர் சந்தானம். இவர் ஏஜிஎஸ் என்டேர்டைன்மெண்ட் நிறுவனத்தின் கீழ் நடித்துவந்த புதிய படம்தான் லவ் பைட். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து இறுதிக்கட்டத்தில் படம் இருக்கும் நிலையில், ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

Santhanam: ஸாம்பீ பராக்… சந்தானத்தின் லவ் பைட் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
லவ் பைட் திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 28 Nov 2026 17:31 PM IST

கோலிவுட் சினிமாவில் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துவந்தவர் சந்தானம் (Santhanam). இவர் தமிழ், தெலுங்கு போன்ற மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இறுதியாக இவரின் நடிப்பில் சினிமாவில் வெளியான திரைப்படம் டிடி நெக்ஸ்ட் லெவல் (DD Next Level). கடந்த 2025ம் ஆண்டில் நடிகர் ஆர்யாவின் தயாரிப்பில் இந்த திரைப்படமானது வெளியாகியிருந்தது. இப்படமானது ஹாரர் மற்றும் நகைச்சுவை கதைக்களத்தில் வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்திருந்த வரவேற்பை பெறவில்லை. இந்த படத்திற்கு பின் இவர் ஜெயிலர் 2 திரைப்படத்தில் (Jailer 2 Movie) முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த காட்சியானது படத்தின் டைமிங் காரணமாக நீக்கப்பட்டிருந்தது. இந்த வரிசையில் இவர் ஹீரோவாக நடித்துவந்த புதிய திரைப்படம்தான் லவ் பைட் (Love Bite Movie).

கான்ஜுரிங் கண்ணப்பன் பட இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் (Selvin Raj Xavier) இயக்க, ஏஜிஎஸ் என்டேர்டைன்மென்டன் நிறுவனமானது இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. இதன் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், தற்போது ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: அஜித்தின் ரசிகர்களுக்காக மாஸ் காட்சி.. டேர் டெவில் படத்தில் சர்ப்ரைஸான சம்பவம் செய்த இயக்குநர்!

சந்தானத்தின் லவ் பைட் பட ரிலீஸ் தேதி:

இந்த லவ் பைட் திரைப்படமானது காமெடி மற்றும் ஸாம்பீ கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் கான்ஜுரிங் கண்ணப்பன் என்ற படத்தை இயக்கி ஹிட் கொடுத்திருந்தார். இந்த வரிசையில் தற்போது லவ் பைட் படத்தையும் இயக்கியுள்ளார். இதில் சந்தானம் ஹீரோவாக நடிக்க, நடிகை அபர்ணா தாஸ் நாயகியாக நடித்துள்ளார்.

இதையும் படிங்க: ஓடிடியில் வெளியாகி உள்ள டோன்ட் ட்ரபிள் தி ட்ரபுள் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!

இதன் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், போஸ்ட் ப்ரொடக்ஷன் பணியில் படக்குழு உள்ளது. இந்நிலையில் லவ் பைட் படமானது 2026ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதியில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

சந்தானத்தின் லவ் பைட் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இந்த லவ் பைட் படத்தில் சந்தானம் மற்றும் அபர்ணா தாஸ் இருவரும் ஜோடியாக இணைந்து நடித்துள்ளனர். அவர்களுடன் நடிகர்கள் ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லீ, நிரோஷா மற்றும் பல்வேறு நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனத்தின் கீழ் கல்பாத்தி அகோரம் தயாரித்துவருகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் foxn இசையமைத்துவருவதாக கூறப்படுகிறது. தற்போது இதன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பேக் டூ பேக் அப்டேட்டுகளை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us