AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Mysskin: ஒரு பெண்ணின் தனிமை.. பிசாசு 2 திரைப்படம் எப்படி இருக்கும் என தெரிவித்த மிஷ்கின்!

Director Mysskin Unveils Pisaasu 2 Plot: தென்னிந்திய சினிமாவில் நடிகர் மற்றும் இயக்குநராக பணியாற்றிவருபவர்தான் மிஷ்கின். இவரின் இயக்கத்தில் தமிழில் வெளியாக காத்திருக்கும் புதிய திரைப்படம் ட்ரெயின். இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின்போது பேசிய மிஷ்கின், அவரின் இயக்கத்தில் வெளியாகாமல் உள்ள பிசாசு 2 திரைப்படம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.

Mysskin: ஒரு பெண்ணின் தனிமை.. பிசாசு 2 திரைப்படம் எப்படி இருக்கும் என தெரிவித்த மிஷ்கின்!
பிசாசு 2 படம் பற்றி மிஷ்கின்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 28 Nov 2026 16:43 PM IST

தமிழ் சினிமாவில் மக்களிடையே அதிகமாக பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் மிஷ்கின் (Director Mysskin). இவரின் இயக்கத்தில் தமிழில் பல திரைப்படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த வரிசையில் இவர் படங்களில் நடிகராகவும் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் சத்யவான் சாவித்ரி (Sathyavan Savithri). கடந்த 2026ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதியில் வெளியான இந்த திரைப்படம் இவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பின் இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், வெளியாக காத்திருக்கும் திரைப்படம்தான் ட்ரெயின் (Train Movie). இதில் விஜய் சேதுபதி (Vijay Sethupathi), ஸ்ருதிஹாசன் (Shruti Haasan) மற்றும் பல்வேறு நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதியில் உலகமெங்கும் வெளியாக காத்திருக்கிறது. இதை முன்னிட்டு சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய மிஷ்கின், தனது இயக்கத்தில் உருவாகி இன்னும் வெளியாகாமல் இருக்கும் பிசாசு 2 திரைப்படத்தின் கதை எவ்வாறு இருக்கும் என்பது குறித்து வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ரஜினி சாரை கடவுளைப் போல மதிக்கிறேன்.. ஆனால் – ரிஷிகாந்த் பேச்சு!

பிசாசு 2 திரைப்படத்தின் கதை எவ்வாறு இருக்கும் என சொன்ன மிஷ்கின்:

அந்த நேர்காணலில் பேசிய இயக்குநர் மிஷ்கின், அதில் “பிசாசு 2 திரைப்படத்தில் முக்கியமாக, ஒரு பெண்ணின் தனிமையை பற்றி சொல்லியிருக்கேன். இந்த சமூகம் ஒரு பெண்ணை என்ன செய்கிறது. அவர் எவ்வாறு உடைக்கிறார் என்பதை இப்படத்தில் நான் கூறியிருக்கிறேன்.

இதையும் படிங்க: மணிரத்னத்தின் இஞ்சி வெல்லம் படத்தின் கதை இதுதானா? வைரலாகும் தகவல்

ஒரு பெண் எதனால் உடைக்கிறார், அவளுக்கு அந்த மனமுறிவு ஏற்படக் காரணம் என்ன, மற்றும் அவள் ஏன் அத்தகைய அனுபவங்களைச் சந்திக்கிறாள் என்பதை இப்படத்தில் காட்டியிருக்கிறேன். இந்த அம்சங்களை மையமாகக் கொண்டு நான் ஒரு விரிவான கதைக்களத்தை உருவாக்கியுள்ளேன்” என அதில் அவர் பேசியுள்ளார்.

ட்ரெயின் திரைப்படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

மிஷ்கின் மற்றும் விஜய் சேதுபதியின் கூட்டணியில் ட்ரெயின் திரைப்படமானது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க, இரயிலுக்குள் நடக்கும் க்ரைம் தொடர்பான கதைக்களத்தில் இது அமைந்துள்ளது. இப்படமானது அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் அமைந்துள்ள நிலையில், 2026ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதியில் பிரம்மாண்டமாக உலகமெங்கும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us