AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அந்த படத்திற்கு ரஜினிகாந்த் பெற்ற சம்பளம் ரூ 2000 தான்.. ஆனால் படத்தின் வசூல் ரூ 3 கோடி.. அட இந்த படம்தான்!

Rajinikanth Moondru Mudichu Movie Salary: தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடவும் உச்ச நட்சத்திர நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் ரஜினிகாந்த். இவர் 1975ம் ஆண்டிலிருந்து சினிமாவில் பணியாற்றிவருகிறார். இவரின் படம் அப்போதே ரூ 3 கோடி வசூல் செய்திருந்தது. அது எந்த படம் மற்றும் ரஜினியின் சம்பளம் குறித்து விவரமாக பார்க்கலாம்.

அந்த படத்திற்கு ரஜினிகாந்த் பெற்ற சம்பளம் ரூ 2000 தான்.. ஆனால் படத்தின் வசூல் ரூ 3 கோடி.. அட இந்த படம்தான்!
ஸ்ரீதேவி மற்றும் ரஜினிகாந்த்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 28 Nov 2026 08:16 AM IST

70ஸ் மற்றும் 80ஸ் காலகட்டத்திலிருந்து தமிழ் சினிமாவில் மாபெரும் நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் ரஜினிகாந்த் (Rajinikanth). இவரை தமிழ் ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றும் அன்போடு அழைத்துவருகிறார்கள். இவர் சினிமாவில் பழம்பெரும் இயக்குநர் கே பாலச்சந்தர் (Director K. Balachander) மூலமாக அறிமுகமானார். இயக்குநர் கே பாலச்சந்தர் இயக்கத்தில், கமல்ஹாசன் (Kamal Haasan) மற்றும் ஸ்ரீவித்யா இணைந்து நடித்திருந்த அபூர்வ ராகங்கள் என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் நடிகராக ரஜினிகாந்த் நுழைந்தார். இந்த படம் இவருக்கு வரவேற்பை கொடுக்க, அதன் பிறகு அடுத்தடுத்த படங்களில் நடித்திருந்தார். அந்த விதத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி (Sridevi) மற்றும் ரஜினிகாந்தின் கூட்டணியில் வெளியான திரைப்படம்தான் மூன்று முடிச்சு (Moondru Mudichu). 1976ம் ஆண்டில் வெளியான இந்த படத்தை இயக்குனர் கே பாலசந்தர் இயக்கியிருந்தார்.

இந்த படத்தில் நடிப்பதற்கு ரஜினிகாந்த் வெறும் ரூ 2000 தான் சம்பளமாக பெற்றிருந்தாராம். ஆனால் இந்த படம் அப்போதே சினிமாவில் ரூ 3 கோடிகள் வசூல் செய்திருந்ததாம். இது குறித்து முன்பு நேர்காணல் ஒன்றில் நடிகை ஸ்ரீதேவி நினைவுகூர்ந்திருந்தார்.

இதையும் படிங்க: சூர்யா – ஜோதிகா காதல் அப்போவே எனக்கு தெரியும் – லைலா பகிர்ந்த விஷயம்!

மூன்று முடிச்சி படத்தில் ரஜினியுடன் பணியாற்றியது பற்றி பேசிய ஸ்ரீதேவி:

முன்பு நடிகர் பிரகாஷ் ராஜ் தொகுத்துவழங்கியிருந்த நேர்காணல் நிகழ்ச்சியில், மூன்று முடிச்சி படத்தில் நடிகர்கள் வாங்கியிருந்த சம்பளம் பற்றி ஸ்ரீதேவி பேசியிருந்தார். அதில் ஸ்ரீதேவி, “நாங்க இந்த படத்தில் ஒன்றாக பணியாற்றும்போது, கமல்ஹாசன் ஒரு முன்னணி நடிகராக இருந்தார். மேலும் நானும், ரஜினிகாந்த் சாரும் அப்போது புதுமுகங்கள்.

இதையும் படிங்க: இந்த உலகத்திலே அழகான பெண்.. ஜேசனை பார்க்க வந்த மனைவி – வைரலாகும் ப்ரோமோ!

இப்படத்தில் கமல்ஹாசன் ஹீரோவாக நடித்திருந்த நிலையில், நானும் ரஜினி சாரும் அறிமுக நடிகர்களாக இருந்தோம். இப்படத்தில் நடிக்க அப்போது கமல்ஹாசன் ரூ 30,000 சம்பளம் வாங்கினார், நான் ரூ 5,000 சம்பளம் வாங்கினேன் மற்றும் ரஜினிகாந்த் சார் ரூ 2000 மட்டுமே சம்பளமாக வாங்கியிருந்தார்” என அதில் அவர் கூறியிருந்தார்.

மூன்று முடிச்சி திரைப்படத்தில் ரஜினிகாந்த்:

1976ம் ஆண்டில் ரஜினிகாந்த் மூன்று முடிச்சு திரைப்படத்தில், கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவியுடன் இணைந்து நடித்தார். இப்படம் அவரது திரை வாழ்க்கையின் முக்கியமான ஆரம்பகாலப் படங்களில் ஒன்றாக அமைந்தது. இதன் பிறகு அவரை ஒரு பெரிய நட்சத்திரமாக தமிழ் மக்கள் மத்தியில் அறிமுகம் செய்தது. மூன்று முடிச்சு படமானது அப்போது ரூ 10 லட்சம் ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு, பாக்ஸ் ஆபிஸில் சுமார் ரூ 3 கோடி வசூல் செய்திருந்ததாக கூறப்படுகிறது.

Follow Us