AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தமிழகத்தில் அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு.. 11 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிப்பு!

Half Yearly Holiday: தமிழகத்தில் 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. டிசம்பர் 23ஆம் தேதி தேர்வுகள் நிறைவடையும் நிலையில், டிசம்பர் 24 முதல் ஜனவரி 3 வரை 11 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 4ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு.. 11 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிப்பு!
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 28 Nov 2026 07:57 AM IST

நவம்பர் 28, 2026: தமிழகத்தில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான 2026-ம் ஆண்டுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, டிசம்பர் 24ஆம் தேதி முதல் 2027 ஜனவரி 3ஆம் தேதி வரை மாணவர்களுக்கு மொத்தம் 11 நாட்கள் அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 4ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

அரையாண்டு தேர்வு எப்போது தொடங்குகிறது?

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அட்டவணையின்படி, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 10ஆம் தேதி அரையாண்டு தேர்வுகள் தொடங்கி டிசம்பர் 23ஆம் தேதி நிறைவடைகின்றன. அதேபோல், 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிசம்பர் 15ஆம் தேதி தேர்வுகள் தொடங்கி டிசம்பர் 23ஆம் தேதி முடிவடைகின்றன.

ஒன்று முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிசம்பர் 16ஆம் தேதி தேர்வுகள் தொடங்கி டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.

மேலும் படிக்க: தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்.. கடலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவு!!

11 நாட்கள் அரையாண்டு விடுமுறை

அரையாண்டு தேர்வுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 3ஆம் தேதி வரை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு இந்த விடுமுறை வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்று தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு.. குவிக்கப்பட்ட மத்திய படையினர்!

ஜனவரி 4ஆம் தேதி திங்கட்கிழமை மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளிகள் திறக்கும் நாளிலேயே 1 முதல் 7ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மூன்றாம் பருவத்திற்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தத் தடை

அரையாண்டு விடுமுறை நாட்களில் எந்தப் பள்ளிகளிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த உத்தரவை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் அரையாண்டு தேர்வுக்குப் பிறகு மாணவர்கள் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகளுடன் 11 நாட்கள் விடுமுறையை கொண்டாட உள்ளனர்.

Follow Us