ரூ.14 லட்சம் வரி பாக்கி செலுத்தாத தியேட்டர்.. திரைப்படம் ஓடிக்கொண்டு இருந்தபோதே புரஜெக்டர் ஜப்தி!
Nagercoil Cinema Projector Seized | கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் வள்ளி என்ற திரையரங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த திரையரங்கம் சுமார் ரூ.14 லட்சம் வரி பாக்கி செலுத்தாதன் காரணமாக, பொதுமக்கள் திரைப்படம் பார்த்துக்கொண்டு இருந்தபோதே அதிகாரிகள் புரஜெக்டரை பறிமுதல் செய்துள்ளனர்.
நாகர்கோயில், நவம்பர் 28 : கன்னியாகுமரியில் (Kanyakumari) வரி பாக்கி செலுத்தாதன் காரணமாக சினிமா தியேட்டரில் (Cinema Theater) திரைப்படம் பார்த்துக்கொண்டு இருந்த ரசிகர்களை வெளியேற்றிவிட்டு, புரஜெக்டரை (Projector) அதிகாரிகள் ஜப்தி செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ரசிகர்கள் திரைப்படம் பார்த்துக்கொண்டு இருந்தபோதே, புரஜெக்டர் ஜப்தி செய்யப்பட்ட சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரூ.14 லட்சம் வரி பாக்கி செலுத்தாத தியேட்டர்
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் வள்ளி என்ற தியேட்டர் செயல்பட்டு வருகிறது. இந்த தியேட்டர் சுமார் ரூ.14 லட்சம் வரி பாக்கியை கொண்டு இருந்துள்ளது. வரி செலுத்த கோரி அந்த தியேட்டருக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அது தொடர்பாக இறுதி கட்ட எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த தியேட்டர் நிர்வாகம் தொடர்ந்து வரி பாக்கி செலுத்தாமல் இருந்து வந்துள்ளது.
இதையும் படிங்க : கள்ளக்குறிச்சி எம்எல்ஏ கைது – 201 பதிவுகள் நீக்கம்… முரணாக பதிவுகளை தவிருங்கள் – காவல்துறை எச்சரிக்கை




ஜப்தி செய்ய தியேட்டருக்கு விரைந்த அதிகாரிகள்
பலமுறை வரி செலுத்த கோரியும் தியேட்டர் நிர்வாகம் கண்டுக்கொள்ளாமல் இருந்ததன் காரணமாக நேற்று (நவம்பர் 27, 2026) காலை 11 மணி அளவில் அதிகாரிகள் தியேட்டருக்கு விரைந்துச் சென்றுள்ளனர். அப்போது அந்த தியேட்டரில் நடிகர் சூரியாவின் சீன் படம் திரையிடப்பட்டுக்கொண்டு இருந்துள்ளது. அந்த திரைப்படத்தை ஏராளமான ரசிகர்கள் உற்சாகத்துடன் பார்த்துக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது அதிகாரிகள் உள்ளே சென்று பாரபட்சம் பார்க்காமல் புரஜெக்டரை ஜப்தி செய்துள்ளனர்.
இதையும் படிங்க : “நீங்க கைது பண்ணல.. நாங்க கைது பண்ண வெச்சோம்”.. அதிமுகவின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.. இபிஎஸ் பெருமிதம்!
பாதியிலேயே புறப்பட்டுச் சென்ற பொதுமக்கள்
அதனை கண்டு திரைப்படம் பார்த்துக்கொண்டு இருந்த ரசிகர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், அவர்களுக்கு இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் திரைப்படத்தை முழுவதும் பார்க்க முடியாத சோகத்தில் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் திரும்பிச் சென்றுள்ளனர். இதேபோல தான் அங்குள்ள ஞானதாசன் மாடரேட்டர் கல்லூரி நிர்வாகத்திலும் அதிகாரிகள் பொருட்களை ஜப்தி செய்துள்ளனர்.
அந்த கல்லூரி நிர்வாகம் சுமார் ரூ.32.50 லட்சம் வரி பாக்கியை வைத்திருந்துள்ளது. அதனை செலுத்த தொடர்ந்து வலியுறுத்தியும் வரி செலுத்தப்படாததன் காரணமாக, கல்லூரி வளாகத்தில் இருந்த டேபிள், சேர் மற்றும் கம்ப்யூட்டர் ஆகிய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.