AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

திருப்பரங்குன்றம் விவகாரம்.. அடுத்தக்கட்ட நகர்வு என்ன?.. முதல்வர் விஜய் அவசர ஆலோசனை!!

CM Vijay Holds Emergency Consultation: திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து, சென்னை பாமினி இல்லத்தில் முதலமைச்சர் விஜய் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தலைமைச் செயலாளர் சாய்குமார், சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் மற்றும் அதிகாரிகளுடன் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

திருப்பரங்குன்றம் விவகாரம்.. அடுத்தக்கட்ட நகர்வு என்ன?.. முதல்வர் விஜய் அவசர ஆலோசனை!!
முதல்வர் விஜய்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 27 Nov 2026 19:17 PM IST

சென்னை, நவ.27: திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தனது முகாம் அலுவலகமான பாமினி இல்லத்தில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். சென்னை பசுமை வழிச் சாலையில் அமைந்துள்ள பொதிகை வளாகத்தின் பாமினி இல்லத்தில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனையில், தலைமைச் செயலாளர் சாய்குமார், சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் நாளை தீபம் ஏற்ற வேண்டும் என்றும், கோவில் அறங்காவலர் குழுவைக் கலைத்தும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள சூழலில் இந்த அவசரக் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதையும் படிக்க: “பயிர் சேதத்தை கணக்கெடுக்க உத்தரவு!”.. விவசாயிகளுக்கு விரைந்து நிவாரணம் வழங்க முதல்வர் விஜய் நடவடிக்கை!!

அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான விவாதம்:

உச்சநீதிமன்றத்தின் இன்றைய உத்தரவுகளைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக மேற்கொண்டு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட சட்ட மற்றும் நிர்வாக ரீதியான நடவடிக்கைகள் குறித்துத் தலைமைச் செயலாளர் சாய்குமார் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் ஆகியோருடன் முதலமைச்சர் விஜய் கலந்தாலோசித்து வருகிறார். உத்தரவுகளின் தன்மை மற்றும் நடைமுறைச் சாத்தியக்கூறுகள் குறித்து அதிகாரிகளிடம் விரிவாகக் கேட்டறியப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முந்தைய உத்தரவுகளும் தற்போதைய சூழலும்:

முன்னதாக, கடந்த நவம்பர் 20-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவைத் தமிழக அரசு முறையாகச் செயல்படுத்தவில்லை என்ற அதிருப்தி கருத்துகளும் எழுந்திருந்தன. இந்தச் சூழலில்தான், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் தெளிவான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. உச்சி பிள்ளையார் கோவில் பகுதியில் ஏற்றப்பட்ட தீபத்திலிருந்து தீயை எடுத்துச் சென்று தீபத்தூணில் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த விவகாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அரசுத் தரப்பில் எடுக்க வேண்டிய நிலைப்பாடுகள் குறித்து தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

இதையும் படிக்க: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் நாளை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு – தர்காவின் பாதுகாப்புக்கு சிஆர்பிஎஃப் படைக்கு உத்தரவு

அரசுத் தரப்பின் நிலைப்பாடு குறித்த எதிர்பார்ப்பு:

சென்னை பாமினி இல்லத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தமிழக அரசின் அடுத்தகட்ட நகர்வுகளைத் தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சட்டத்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் நடைபெற்று வரும் இந்தக் கலந்தாலோசனைக்குப் பிறகு, உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலான நடவடிக்கைகள் குறித்த தெளிவான அணுகுமுறை உருவாகும் எனக் கருதப்படுகிறது.

Follow Us