AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மின்சார வாகனங்கள் சேவை, டயர்கள், உரங்கள் ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டியில் மாற்றம் – எவ்வளவு தெரியுமா?

GST Rate Revisions and Tax Exemptions : தமிழ்நாட்டில் சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பாக புதிய திருத்தங்களை செய்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.அந்த வகையில் தபால் கூரியர் சேவைகளை தவிர பிற விநியோக சேவைகளுக்கான வரி நடைமுறையிலும் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார வாகனங்கள் சேவை, டயர்கள், உரங்கள் ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டியில் மாற்றம் – எவ்வளவு தெரியுமா?
தலைமை செயலகம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 27 Nov 2026 19:11 PM IST

சென்னை, நவம்பர் 27 : தமிழ்நாட்டில் சரக்கு மற்றும் சேவை வரி (GST) தொடர்பாக புதிய திருத்தங்களை செய்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.அந்த வகையில் தபால் கூரியர் சேவைகளை தவிர பிற விநியோக சேவைகளுக்கான வரி நடைமுறையிலும் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உரங்கள், டயர்கள் மின்சார வாகன சேவைகள் ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டி நடைமுறையில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மின்சார வாகனங்கள் சேவை, டயர்கள், உரங்கள் ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டியில் மாற்றம்

தமிழ்நாட்டில் வணிக வரி மற்றும் பதிவுத்துறை தபால் மற்றும் கூரியர் சேவைகளை தவிர்த்து உரங்கள், டயர்கள், மின்சார வாகன சேவைகள் ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டி வரி நடைமுறையில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த மாற்றங்கள் அனைத்தும் 2026ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முன்கூட்டியே பார்செல் செய்யப்பட்டு, லேபிள் ஒட்டப்பட்டு விற்பனை செய்யப்படும் விலங்கு மற்றும் தாவர உரங்கள், இயற்கை உரங்கள் ஆகியவற்றுக்கு 2.5 சதவீத மாநில ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்.

இதையும் படிக்க : “பயிர் சேதத்தை கணக்கெடுக்க உத்தரவு!”.. விவசாயிகளுக்கு விரைந்து நிவாரணம் வழங்க முதல்வர் விஜய் நடவடிக்கை!!

மறுபதப்படுத்தப்பட்ட டிராக்டர் டயர்களுக்கும் 2.5 சதவீத மாநில ஜிஎஸ்டி வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், மறுபதப்படுத்தப்பட்ட அல்லது பயன்படுத்தப்பட்ட பிற ரப்பர் டயர்கள், திடமான மற்றும் குஷன் வகை டயர்கள் உள்ளிட்டவற்றிற்கு 9 சதவீத மாநில ஜிஎஸ்டி வரி பொருந்தும். சைலியம் விதைகள் தொடர்பான பொருட்கள், வரி விலக்கு அளிக்கப்படும் பொருட்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

மின்சார வாகனங்களை வாடகைக்கு வழங்கும் சேவைகளுக்கு 2.5 சதவீத மாநில ஜிஎஸ்டி வரி

பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய், பிளாஸ்டிக் கழிவுகள், டயர் கழிவுகள், மின்சார மற்றும் மின்னணுக் கழிவுகள் ஆகியவற்றை பதிவு செய்யப்படாத நபர்களிடம் இருந்து பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் அல்லது நபர்கள் வாங்கும்போது, அதற்கான ஜிஎஸ்டி வரியை வாங்குபவரே செலுத்த வேண்டும் என புதிய நடைமுறையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, ஹோட்டல் தங்குமிடம், உணவகச் சேவை மற்றும் வெளிப்புற உணவு வழங்கும் சேவைகளில் உள்ளீட்டு வரிக் கழிவு பெறுவதற்கான விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அதே தொழில் வரிசையில் உள்ள மற்றொரு நிறுவனத்திடம் இருந்து பெறப்படும் சேவைக்கான உள்ளீட்டு வரிக் கழிவை குறிப்பிட்ட வரம்புக்குள் பெறலாம். மேலும் பயணிகளை ஏற்றிச் செல்லும் மின்சார வாகனப் போக்குவரத்து மற்றும் மின்சார வாகனங்களை வாடகைக்கு வழங்கும் சேவைகளுக்கு 2.5 சதவீத மாநில ஜிஎஸ்டி வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

காபி பதப்படுத்தும் சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு

பொருட்களைக் கொண்டு செல்வதற்காக மின்சார வாகனங்களை வாடகைக்கு வழங்கும் சேவைகளுக்கும் இதே வரி விதிக்கப்படும். இந்தச் சேவைகளில் பேட்டரியை சார்ஜ் செய்வதற்கான செலவும், வாடகைத் தொகையில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். இச்சேவைகளை வழங்குவதற்கான உள்ளீட்டு வரிக் கழிவு பெறுவதிலும், குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தபால் மற்றும் கூரியர் சேவைகளைத் தவிர்த்த பிற விநியோகச் சேவைகளுக்கான வரி நடைமுறையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மின்னணு வணிக தளங்கள் மூலம் வழங்கப்படும் விநியோக சேவைகளில், சேவை வழங்குபவரின் பதிவு நிலையைப் பொறுத்து வரி செலுத்தும் பொறுப்பும் நிர்ணயிக்கப்படும்.

இதையும் படிக்க :  அதிமுக ஆர்ப்பாட்டம்.. எஸ்பி வேலுமணி, சி.வி. சண்முகம், நத்தம் விஸ்வநாதன் பெயர்கள் இடம்பெறாததால் பரபரப்பு!

குறிப்பிட்ட சூழல்களில், சேவையை வழங்குபவர் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லாதவராக இருந்தால், வரி செலுத்தும் பொறுப்பு மின்னணு வணிகத் தளத்துக்கு மாற்றப்படுகிறது. சாலைகள் மற்றூம் நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிப்பதற்கான உரிமை மற்றும் அனுமதி வழங்குவது தொடர்பான சேவைகளுக்கும் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, காபி விவசாயிகளுக்கு வழங்கப்படும் காபி பதப்படுத்தும் சேவைகளுக்கும், ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விதைகள் என்பதற்கான வரையறை விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. தானியங்கள், சிறுதானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், நார்ப் பயிர்கள், தீவனப் பயிர்கள், பழங்கள், காய்கறீகள், மசாலாப் பொருட்கள், மலர்கள், அலங்காரச் செடிகள் உள்ளிட்டவற்றின் விதைகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

மேலும், நாற்றுகள், கிழங்குகள், வேர்கள், ஓட்டுச் செடிகள், திசு வளர்ப்பு முரையில் உருவாக்கப்பட்ட செடிகள் உள்ளிட்ட நடவுப் பொருட்களும் விதை என்ற வரையறைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. சுங்கச்சாவடி செயல்பாடு, பராமரிப்பு மற்றும் பின்னர் ஒப்படைக்கும் ஒப்பந்தத்தின் கீழ் சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளைப் பராமரிக்கும் தனியார் ஒப்பந்ததாரர்களுக்கான வரி செலுத்தும் நடைமுறையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Follow Us