AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
Watch Video: கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் விஜய்!

Watch Video: கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் விஜய்!

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 20 Nov 2026 11:28 AM IST

CM Vijay: முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நேரில் சென்று வி.எஸ். பாபுவின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது அருகில் இருந்த அவரது மனைவி கணவரின் உடலைப் பார்த்துக் கதறி அழுதார். இதையடுத்து அவருக்கு அருகில் அமர்ந்த முதலமைச்சர் விஜய் ஆறுதல் கூறினார்.

நவம்பர் 20, 2026: கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு உடல்நலக் குறைவால் உயிரிழந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது கணவரின் உடலைப் பார்த்து கதறி அழுத வி.எஸ். பாபுவின் மனைவிக்கு அருகில் அமர்ந்து ஆறுதல் தெரிவித்தார்.

72 நாட்கள் தீவிர சிகிச்சை!

75 வயதான வி.எஸ். பாபு, கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுவாசக் கோளாறு மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சுமார் 72 நாட்களாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்தார்.

இந்த நிலையில், நவம்பர் 19ஆம் தேதி அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து பிற்பகல் 2.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த நிலையில், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நேரில் சென்று வி.எஸ். பாபுவின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது அருகில் இருந்த அவரது மனைவி கணவரின் உடலைப் பார்த்துக் கதறி அழுதார். இதையடுத்து அவருக்கு அருகில் அமர்ந்த முதலமைச்சர் விஜய் ஆறுதல் கூறினார். இந்தச் சம்பவம் அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Published on: Nov 20, 2026 11:13 AM
Follow Us