காட்டுப்பகுதியில் உலா வந்த புலி மற்றும் யானைகளை அருகில் சென்று பார்வையிட்டதுடன், புளியை நோக்கி ஓடிய தமிழக அமைச்சர் வன்னி அரசின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையையும் கடுமையான விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வன்னி அரசு, சமீபத்தில் குடும்பத்துடன் வனப்பகுதிக்குச் சுற்றுலா சென்றபோது எடுத்த வீடியோக்களைத் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் காடுகளுக்குள் நடந்து செல்வதும், வனவிலங்குகளான புலி மற்றும் யானைகளுக்கு அருகில் சென்று அவற்றை வீடியோ எடுப்பதும் பதிவாகியுள்ளது