இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் திருமணம் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. நவம்பர் 11ஆம் தேதி கிரீஸ் நாட்டில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் நடைபெற்றது. தொடர்ந்து, நவம்பர் 21ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமான திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்த நிலையில், காவ்யா மாறனின் தந்தையும் சன் குழுமத்தின் தலைவருமான கலாநிதி மாறனின் காதல் திருமணம் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் மீண்டும் வைரலாகி வருகின்றன. இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே ஒரு நேர்காணலில் பேசியிருந்தார்.