AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
சேலத்தில் ஜவர்கலால் நேருவின் சிலையை கண்டு கொள்ளாத தமிழக அரசு - மக்கள் அதிருப்தி

சேலத்தில் ஜவர்கலால் நேருவின் சிலையை கண்டு கொள்ளாத தமிழக அரசு – மக்கள் அதிருப்தி

Karthikeyan S
Karthikeyan S | Published: 14 Nov 2026 16:58 PM IST

Salem Nehru Statue Neglect Controversy : குழந்தைகள் தினத்தில் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கேக்கு வழங்குவதால் கூறி விளம்பரப்படுத்திக் கொள்ளும் தவெக அரசு, சேலம் மாநகரில் உள்ள முன்னாள் பாரதப் பிரதமர் ஜவர்கலால் நேருவின் சிலையை கண்டுகொள்ளாமல் இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் பாரத பிரதமர் ஜவர்கலால் நேருவின் பிறந்த நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த குழந்தைகள் தினத்தில் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கேக்கு வழங்குவதால் கூறி விளம்பரப்படுத்திக் கொள்ளும் தவெக அரசு, சேலம் மாநகரில் உள்ள முன்னாள் பாரதப் பிரதமர் ஜவர்கலால் நேருவின் சிலையை கண்டுகொள்ளாமல் இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாநகராட்சி 45 ஆவது கோட்டத்திற்குட்பட்ட நேரு நகர் பகுதியில் உள்ள ஜவர்கலால் நேருவின் திருவுருவ சிலை முறையாக பராமரிக்கப்படாமல் முட்புதிர்கள் நிறைந்து காய்ந்த மாலையுடன் காட்சியளிக்கிறது. அவரது பிறந்த நாளன்று கூட நேருவின் சிலையை தூய்மைப்படுத்தி மரியாதை செலுத்தும் எண்ணம் மாவட்ட நிர்வாகத்திற்கு அல்லது காங்கிரஸ் கட்சியினருக்கோ இல்லை என்று அந்த பகுதி மக்கள் வேதனையோடு தெரிவிக்கின்றனர்.

மட்டுமல்லாமல் முன்னாள் பாரத பிரதமரின் பிறந்த நாளான இன்று சேலம் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எந்த ஒரு இடத்திலும் குறைந்தபட்சம் அவரது திருவுருவ படத்திற்கு மாலை கூட அனுபவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சேலம் மாநகரில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் குறிப்பாக தற்போது உள்ள நிர்வாகிகள் நேருவின் திருவுருவ சிலை குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று முன்னாள் காங்கிரஸ் கட்சியினர் வேதனையோடு தெரிவிக்கின்றனர்.

Follow Us