உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வார் - டேராடூன் நெடுஞ்சாலையில், காட்டு யானை ஒன்று இருசக்கர வாகன ஓட்டியை இரண்டு முறை மிதித்தும் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் நேபாளி பண்ணை அருகே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்போது சாலையில் வந்த யானை, இருசக்கர வாகன ஓட்டியின் வயிறு மற்றும் மார்புப் பகுதியில் இரண்டு முறை காலால் மிதித்துள்ளது. இதில் அவர் யானையின் கால்களுக்கு அடியில் சிக்கிக்கொண்டார்.