AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Tamil Nadu Weather Alert: தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை – எங்கெல்லாம் தெரியுமா?

Tamil Nadu Weather forecast: லட்சத்தீவின் தெற்குப் பகுதிகளிலிருந்து மத்தியக்கிழக்கு அரபிக்கடல் வழியாக கடலோர கர்நாடகா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் டிசம்பர் 3, 2026 வரை மழைக்கு வாய்யுப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது

Tamil Nadu Weather Alert: தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை – எங்கெல்லாம் தெரியுமா?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 27 Nov 2026 14:46 PM IST

சென்னை, நவம்பர் 27 : லட்சத்தீவின் தெற்குப் பகுதிகளிலிருந்து மத்தியக்கிழக்கு அரபிக்கடல் வழியாக கடலோர கர்நாடகா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் டிசம்பர் 3, 2026 வரை மழைக்கு வாய்யுப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக வருகிற நவம்பர் 27, 2026 இன்றும் நவம்பர் 28, 2026 நாளையும் பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு (Heavy Rain Alert) வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

இதன் காரணமாக நவம்பர் 27, 2026 இன்று கோயம்புத்தூர் மாவட்டம் மற்றும் தேனி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

இதையும் படிக்க : ஓட ஓட விரட்டி இளைஞர் படுகொலை.. கொலையாளிக்கு போலீசார் வலை வீச்சு.. கன்னியாகுமரியில் அதிர்ச்சி சம்பவம்!

நவம்பர் 28, 2026 வரை நீலகிரி, கோயம்புத்தூர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்றும் திருப்பூர், ஈரோடு, கடலூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் பிற பகுதிகளில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை நிலவரம்

சென்னையைப் பொறுத்தவரை நவம்பர் 27, 2026 இன்றும் மற்றும் நவம்பர் 28, 2026 நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 முதல் 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 முதல் 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : கிண்டி சிறுவர் பூங்காவில் பறவைகள் உயிரிழப்பு – 3 நாட்களுக்கு பூங்கா மூடல்!

உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி

இதற்கிடையே வருகிற நவம்பர் 30, 2026 திங்கள்கிழமை வங்கக்கடலில்திய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தென் மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தில் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்படுகிறது. இதற்கு முன் வங்கக்கடலில் அர்னாப், முரசு, அக்வான் ஆகிய மூன்று புயல்களும் தமிழ்நாட்டுக்கு மழையைக் கொடுக்காமல் ஏமாற்றிய நிலையில் இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாட்டுக்கு மழை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Follow Us