ஓட ஓட விரட்டி இளைஞர் படுகொலை.. கொலையாளிக்கு போலீசார் வலை வீச்சு.. கன்னியாகுமரியில் அதிர்ச்சி சம்பவம்!
Kanyakumari Crime : கன்னியாகுமரி மாவட்டத்தில் வெளிநாட்டில் இருந்து விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த இளைஞர் ரெளடி ஒருவர் ஓட ஓட விரட்டி கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில், அந்த நபரை கைது செய்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு வந்த இளைஞரை ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம், திங்கள் சந்தை அருகே உள்ள காட்டுவிளை பகுதியில் வசித்து வந்தவர் ஷமீம் ( 27 வயது). இவர், துபாயில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு தனது குடும்பத்தினரை பார்ப்பதற்காக விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். நேற்று வியாழக்கிழமை இரவு ஷமீம் காட்டுவிளை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, இவருக்கும் அங்கு வந்த ஒருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
கத்தியால் குத்தியதில் நிலைகுலைந்து விழுந்து இளைஞர் பலி
இந்த தகராறு கைகலப்பாக மாறிய நிலையில், ஆத்திரம் அடைந்த தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஷமீமின் நெஞ்சுப்பகுதியில் சரமாரியாக குத்தினார். இதனை சற்றும் எதிர்பாராத ஷமீம் நிலைகுலைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தார். அவரது சத்தம் கேட்ட உடனே அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வருவதற்குள், அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். உடனே, ஷமீமை மீட்ட பொதுமக்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.
மேலும் படிக்க: அம்பாசமுத்திரம்- பெருந்துறை தொகுதி இடைத்தேர்தல் தடை நீக்கம்.. 3 தொகுதிகளுக்கு தொடர்கிறது தடை!
இளைஞரை கொலை செய்யும் பரபரப்பு காட்சிகள்
இதைத் தொடர்ந்து, தகவல் அறிந்த தக்கலை போலீசார் மற்றும் திங்கள் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு விசாரணை மேற்கொண்ட நிலையில், உயிரிழந்த ஷமீமின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், சம்பவம் நடந்த இடத்தில் மற்றும் வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
முன்விரோதம் காரணமாக கொலை நிகழ்ந்ததா
இதில், இளைஞர் சமீமை ரவுடி ஒருவர் வழிமறித்து கத்தியால் நெஞ்சைப் பிளந்து கொடூரமாக குத்தி கொலை செய்யும் பரபரப்பு காட்சிகள் பதிவாகி இருந்தது. இந்த சிசிடிவி கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. கொலையாளி குறித்த விவரங்களை சேகரித்த போலீசார் தலைமறைவாக இருந்து வரும் அவரை கைது செய்வதற்கு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: அரசியல் அழுத்தம் காரணமா? அன்பில் மகேஷ் வழக்கு விசாரணையிருந்து நீதிபதி திடீர் விலகல்.. என்ன காரணம்!