AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கோவை மாநகராட்சி வெளியிட்ட படத்தில் AI Gemini முத்திரை.. உண்மையிலேயே மண் அகற்றப்பட்டதா? மக்கள் அதிர்ச்சி!

Coimbatore Corporation Photo AI Gemini Logo : கோயம்புத்தூர் மாவட்டத்தில் சாலை ஒரங்களில் குவிந்திருந்த மணலை அகற்றியதாக மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் செயற்கை நுண்ணறிவு ஜெமினி முத்திரை இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அது குறித்த முழு விவரத்தை பார்க்கலாம்.

கோவை மாநகராட்சி வெளியிட்ட படத்தில் AI Gemini முத்திரை.. உண்மையிலேயே மண் அகற்றப்பட்டதா? மக்கள் அதிர்ச்சி!
புகைப்படத்தில் இருந்த ஏஐ ஜெமினி முத்திரை.
Sekaran S
Sekaran S | Published: 27 Nov 2026 11:59 AM IST

கோயம்புத்தூர் மாவட்டத்தில் சாலையோரங்களில் தேங்கி இருக்கும் மணலை அகற்ற வேண்டும் என்ற கோரிக்க எழுந்த நிலையில், அதனை அகற்றிவிட்டதா மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் ஏஐ ஜெமின் முத்திரை இருந்தது சர்ச்சை ஆகி பேசும் பொருளாகி உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம், மாநகராட்சிக்கு உள்பட்ட மேற்கு மண்டலத்தில் தடாகம் பிரதான சாலை, கே. கே. புதூர் பகுதியில் அமைந்துள்ள மேம்பாலம் மற்றும் சாலை ஓரங்களில் மணல் தேங்கி இருப்பதாகவும், இதனால், விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் புகார் எழுந்தது. அத்துடன், சாலை ஓரங்களில் தேங்கி உள்ள மணலை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் சாலைகளில் இருந்த மண்ணை எந்திரங்கள் மூலமாக அகற்றி தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அந்தப் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு அதற்கான புகைப்படம் மற்றும் செய்தியை கோயம்புத்தூர் மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டிருந்தது.

மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட புகைப்படத்தில் ஏஐ ஜெமின் முத்திரை

ஆனால், அந்த புகைப்படத்தில் தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. அது என்னவெனில், மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள மணல் அகற்றப்பட்ட புகைப்படத்தில் ஓரத்தில் ( ஏஐ ஜெமினி) லோகோ இடம்பெற்றுள்ளது. அதாவது, சம்பந்தப்பட்ட இடத்தில் மணலை அகற்றுவதற்கு பதிலாக செயற்கை நுண்ணறிவு ( ஏஐ ஜெமினி) மூலமாக மணலை அகற்றியது போல மாற்றி புகைப்படத்தை வெளியிட்டு உள்ளனரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அத்துடன், கோயம்புத்தூர் மாநகராட்சி நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ பணிகள் முடிந்ததற்காக வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில் ஏஐ ஜெமினி முத்திரை இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

மேலும் படிக்க: சென்னை மேயர் பிரியாவை ஆபாசமாக சித்தரித்து வீடியோ.. தவெகவினருக்கு மக்கள் பாடம் புகட்டும் நாள் தொலைவில் இல்லை.. திமுக மகளிரணி கடும் கண்டனம்!

ஏஐ ஜெமினி மூலம் புகைப்பட எடிட் செய்யப்பட்டதா

கே. கே. புதூர் பகுதியில் உண்மையிலேயே எந்திரங்கள் மூலம் மணல் அகற்றப்பட்டு சாலை தூய்மைப்படுத்தப்பட்டதா அல்லது வேலை எதுவும் செய்யாமலேயே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமாக புகைப்படத்தை எடிட் செய்து வெளியீட்டு உள்ளனரா இன்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அத்துடன், இந்த விவகாரம் கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாநகராட்சி வெளியிட்டுள்ள ஏ.ஐ. ஜெமினி முத்திரை உடைய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது.

கோவை மாநகராட்சி நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும்

இது தொடர்பாக, மாநகராட்சி நிர்வாகம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். கே. கே. புதூர் பகுதியில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உண்மை நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். மேலும், இந்த விவகாரம் பொது மக்கள் மத்தியில் பேசும் பொருளாகி உள்ளது.

மேலும் படிக்க: அம்பாசமுத்திரம்- பெருந்துறை தொகுதி இடைத்தேர்தல் தடை நீக்கம்.. 3 தொகுதிகளுக்கு தொடர்கிறது தடை!

Follow Us