AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ரேஷன் கடை காலி பணியிடங்கள்.. சுய உதவிக்குழு தேர்வுக்கு எதிர்ப்பு.. இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க கோரிக்கை!

Ration Shops Vacant Positions : தமிழக ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர், எடையாளர் பணியிடங்களை மகளிர் சுய உதவிக்குழுவினர் மூலம் நிரப்புவதற்கு அரசு நியாய விலைக் கடை பணியாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. படித்த இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வலியுறுத்தியுள்ளது.

ரேஷன் கடை காலி பணியிடங்கள்.. சுய உதவிக்குழு தேர்வுக்கு எதிர்ப்பு.. இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க கோரிக்கை!
மாதிரி புகைப்படம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 27 Nov 2026 08:28 AM IST

தமிழகத்தில் செயல்பட்டு வரும் ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்கு மகளிர் சுய உதவி குழுக்கள் மூலமாக ஆட்கள் தேர்வு செய்யும் நடைமுறைக்கு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கூட்டுறவுத்துறை மற்றும் நுகர்பொருள் வாணிப கழக கட்டுப்பாட்டில் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகள் மூலமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் இடையாறு பணிகளுக்கு மகளிர் சுய உதவி குழு மூலமாக ஆட்களை தற்காலிகமாக தேர்வு செய்யலாம் என்று கூட்டுறவுத்துறை பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார்.

மகளிர் சுய உதவி குழுவினர் ஆள்கள் தேர்வுக்கு எதிர்ப்பு

இதற்கு, ரேஷன் கடை பணியாளர்கள், படித்த இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அத்துடன் இந்த சுற்றறிக்கையை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனிடையே, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்திற்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டில் செயல்படும் நியாய விலைக் கடைகளில் கடந்த ஆகஸ்ட் 31- ஆம் தேதி நிலவரப்படி 1,714 விற்பனையாளர் பணியிடங்கள், 176 எடையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், பணியில் உள்ள ஊழியர்கள் கூடுதல் பொறுப்புகளை ஏற்க வேண்டிய நிலை உள்ளது.

மேலும் படிக்க: சென்னை மேயர் பிரியாவை ஆபாசமாக சித்தரித்து வீடியோ.. தவெகவினருக்கு மக்கள் பாடம் புகட்டும் நாள் தொலைவில் இல்லை.. திமுக மகளிரணி கடும் கண்டனம்!

இடையூறுகளை தவிர்க்கவே சுய உதவி குழு மூலம் ஆள்கள் தேர்வு

இதன் காரணமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் தோறும் பொது விநியோகத் திட்ட பொருட்களை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதனால், இடையூறுகளை தவிர்க்க மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களை தற்காலிகமாக நியமித்து நியாய விலைக் கடைகளை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, விற்பனையாளர் பணிக்கு 12- ஆம் வகுப்பு, கட்டுனர் பணிக்கு 10- ஆம் வகுப்பும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் சம்பந்தப்பட்ட ரேஷன் கடை அமைந்துள்ள பகுதிக்குள் வசிப்பவராக இருத்தல் வேண்டும் என்பன உள்ளிட்ட தகுதிகள் உள்ளன.

படித்த இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்

இந்த நிலையில், அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்க மாநில துணைத் தலைவர் கூறுகையில், ரேஷன் கடை காலிப்பணியிடங்களை மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம் மூலமாக மட்டுமே நிரப்ப வேண்டும். மகளிர் சுய உதவி குழு மூலமாக ஆள்கள் தேர்வு தவறான முன்னுதாரணமாகும். ரேஷன் கடைகளை தனியார் மயமாக்குவதற்கு வழிவகுக்கும். படித்த இளைஞர்கள் மூலமாக காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: டாஸ்மாக் பார் டெண்டரில் இனி இது தான் ரூல்ஸ்.. ஆயத்தீர்வைத் துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Follow Us