Laila: சூர்யா – ஜோதிகா காதல் அப்போவே எனக்கு தெரியும் – லைலா பகிர்ந்த விஷயம்!
Laila About Suriya-Jyothika Love Story: 2000ம் ஆண்டு தொடக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்துவந்தவர் லைலா. இவர் முன்பு பேட்டி ஒன்றில், சூர்யா மற்றும் ஜோதிகாவின் காதல் தனக்கு எப்போது தெரியவந்தது என்பது குறித்து பகிர்ந்துள்ளார். அது பற்றி விவரமாக பார்க்கலாம்.
தென்னிந்திய சினிமாவில் 2000ம் ஆண்டு தொடக்க காலத்தில் பிரபலமான கதாநாயகியாக இருந்துவந்தவர் லைலா (Actress Laila). இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் கடந்த 1996ம் ஆண்டில் “துஷ்மன் துன்யா கா” (Dushman Duniya Ka) என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். இந்த படத்திற்கு பிறகு மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் கதாநாயகியாக படங்களில் நடித்துவந்தார் . இந்த வரிசையில் தமிழில் இவருக்கும் முதல் திரைப்படமாக அமைந்தது 1999ம் ஆண்டில் தமிழில் வெளியான கள்ளழகர் (Kallazhagar). இதில் நடிகர் விஜயகாந்துக்கு (Vijayakanth) ஜோடியாக நடித்து தமிழில் நுழைந்தார். இந்த படத்திற்கு பிறகு இவருக்கு தமிழில் பிரபலம் கிடைக்க தொடங்கியது. பார்த்தேன் ரசித்தேன், தீனா, தில், நந்தா, உன்னை நினைத்து என பல்வேறு படங்களில் நாயகியாக நடித்திருந்தார்.
மேலும் சூர்யாவுடன் (Suriya) ஜோடியாக பல படங்கள் நடித்து ஹிட் கொடுத்திருக்கிறார். மேலும் சூர்யாவுடன் நடித்த நடிகைகளில் அவருக்கு சரியான ஜோடியாக சினிமாவில் இருந்தவர் லைலா என நடிகை ஜோதிகாவே (Jyothika) கூறியிருக்கிறார். இந்நிலையில் முன்பு நேர்காணல் ஒன்றில் பேசிய லைலா, சூர்யா மற்றும் ஜோதிகாவின் காதல் தனக்கு எவ்வாறு தெரியவந்தது என கூறியுள்ளார்.




இதையும் படிங்க: ஆந்திரா சாப்பாடு என்றால் அனிருத்துக்கு ரொம்ப பிடிக்குமாம்! சென்னையில் அவருக்கு மிகவும் பிடித்த உணவகம் எது தெரியுமா?
சூர்யா மற்றும் ஜோதிகாவின் காதல் தெரியவந்தது குறித்து பேசிய லைலா:
அந்த நேர்காணலில் பேசிய லைலா, “நான் ஜோதிகா மற்றும் சூர்யாவின் நெருங்கிய தோழி. அதனால் கண்டிப்பாக அவர்களின் காதல் குறித்து தெரியும். நாங்கள் 3 ரோஸஸ் என்ற படத்தில் நடித்துகொண்டிக்கும்போது எனக்கு இவர்கள் இருவரின் காதல் குறித்து தெரியும். அப்போது ஜோதிகாதா அவர்களின் காதல் குறித்து என்னிடம் கூறியிருந்தார். மேலும் நடிகர் சூர்யா ஷூட்டிங் நேரத்தில், ஜோதிகாவை காரில் வந்து பிக்கப் செய்வார்” என அதில் அவர் வெளிப்படையாக கூறியிருந்தார்.
இதையும் படிங்க: மலையாள சினிமாவில் மம்முட்டி போலீஸாக நடித்த இந்த உண்டா படத்தை பார்த்திருக்கீங்களா? உண்டா படத்தை மிஸ் செய்யாதீர்கள்
நடிகை லைலாவின் இன்ஸ்டாகிராம் போட்டோஸ் பதிவு:
View this post on Instagram
நடிகை லைலா தமிழ் சினிமாவில் தற்போது சில படங்களில் நடித்துவருகிறார். இவர் கடந்த 2024ம் ஆண்டு முதல்வர் விஜய்யின் நடிப்பில் வெளியான தி கோட் திரைப்படத்தில், நடிகர் பிரசாந்தின் மனைவியாக ஒரு சிறு வேடத்தில் நடித்திருந்தார். இறுதியாக தமிழில் இவர் 2025ம் ஆண்டில் சப்தம் என்ற படம் ஒன்றில் நடித்திருந்தார். இதற்க்கு பிறகு பெரிதாக எந்த படங்களிலும் இவர் நடிக்கவில்லை என்ற நிலையில், சின்னத்திரை நிகழ்ச்சியில் நடுவராக இருந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.