IPL 2027: ஐபிஎல்லில் இந்த அணிக்காக விளையாடுவதே கனவு.. மனம் திறந்த ஆர்யவீர் சேவாக்!
Aaryavir Sehwag's IPL 2027 Dream: ஆர்யவீர் சேவாக் ஐபிஎல் 2027 மினி ஏலத்திற்குப் பதிவு செய்துள்ளார். விராட் கோலியுடன் விளையாடி, ஆர்சிபி அணியில் சேர விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். இளம் வீரரான ஆர்யவீர், சமீபத்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பையில் தொடர் நாயகன் விருதை வென்று தனது திறமையை நிரூபித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வீரேந்தர் சேவாக்கின் மகனான ஆர்யவீர் சேவாக் , தனது ஐபிஎல் (IPL 2027) அறிமுகத்திற்குத் தயாராகிவிட்டார். 2027 ஐபிஎல் மினி-ஏலத்தில் ரூ. 30 லட்சம் அடிப்படை விலைக்குப் பதிவு செய்துள்ள இந்த 19 வயது பேட்ஸ்மேன் ஆர்யவீர் சேவாக், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியில் சேர மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளார். சமீபத்தில், CREX-க்கு அளித்த ஒரு பிரத்யேக நேர்காணலில், ஆர்யவீர் சேவாக் தனது ஐபிஎல் கனவுகள் மற்றும் பிடித்த வீரர்கள் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
ALSO READ: இந்திய அணிக்காக விளையாடிய 7 வீரர்கள்.. அன்கேப்டு வீரர்களா? ஐபிஎல்லில் இப்படி ஒரு விதியா?




இதுவே என் கனவு..
With Aaryavir Sehwag registering for his maiden IPL auction, the youngster reveals which IPL team he would love to play for in an exclusive chat with CREX! 👀
#AaryavirSehwag #IPL #CricketMatlabCREX https://t.co/k46KJEkZm4
— CREX (@Crex_live) November 25, 2026
விராட் கோலி குறித்து பேசிய ஆர்யவீர் சேவாக், “நான் சிறுவயதிலிருந்தே விராட் கோலி விளையாடுவதைப் பார்த்து வளர்ந்திருக்கிறேன். அவர் இந்தத் தலைமுறையின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன். அவருடன் ஒரே உடை மாற்றும் அறையில் இருந்து பேட்டிங் ஆலோசனைகளைப் பெறுவதே என் கனவு. அந்த வாய்ப்புக்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். ஏலத்தில் எந்த அணி என்னை எடுத்தாலும் நான் அவர்களுக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன். நான் ஆர்சிபி அணிக்குத் தேர்ந்தெடுக்கப்படாவிட்டாலும், ஐபிஎல் போட்டியில் கோலியைச் சந்தித்துப் பேச எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். ” என்று கூறினார்.
இதன் மூலம், ஆர்யவீர் சேவாக் ஆர்சிபி அணிக்காக விளையாட வேண்டும் என்ற தனது விருப்பத்தை மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார். ஏனெனில், ஐபிஎல் தொடங்கியதிலிருந்தே விராட் கோலி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஓர் முக்கிய அங்கமாக இருந்து வருகிறார். எனவே, கோலியுடன் டிரெஸ்ஸிங் ரூமை பகிர்ந்துகொள்ள விரும்பினால், ஆர்யவீர் ஆர்சிபி அணியில் இடம் பெற வேண்டும். வருகின்ற 2026 டிசம்பர் 16ம் தேதி நடைபெறும் ஐபிஎல் 2027 மினி ஏலத்தில் ஆர்சிபி அணி ஆர்யவீர் சேவாக்கை எடுக்க வேண்டும்.
ALSO READ: மும்பை இந்தியன்ஸ் கேப்டன் இவர்தான்.. வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் அசத்திய ஆர்யவீர்:
2026-ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பைத் தொடரில் தனது அபாரமான ஆட்டத்தால் ஆர்யவீர் சேவாக் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அவர் இத்தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரராகத் திகழ்ந்ததுடன், 5 இன்னிங்ஸ்களில் 90.25 சராசரியில் 361 ரன்கள் குவித்து ‘தொடர் நாயகன்’ விருதையும் வென்றார். ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக 160 ரன்கள் என்ற சிறப்பான சதத்தையும், பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் அரைசதத்தையும் அடித்து ஆர்யவீர் சேவா ஜொலித்தார். இந்த அபாரமான ஆட்டத்திறனுடன், ஆர்யவீர் தற்போது ஐபிஎல் ஏலத்தில் தனது பெயரைப் பதிவு செய்துள்ளார்.