AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IPL 2027: ஐபிஎல் 2027 ஏலத்தில் இதுவரை 1220 வீரர்கள் பதிவு.. விரிவான பட்டியலை வெளியிட்ட பிசிசிஐ!

IPL 2027 Auction: ஐபிஎல் 2027 வீரர் ஏலத்திற்காக மொத்தம் 1,220 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் 939 இந்திய மற்றும் 17 நாடுகளைச் சேர்ந்த 281 வெளிநாட்டு வீரர்கள் அடங்குவர் என பிசிசிஐ அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளிலிருந்து அதிக வீரர்கள் பதிவு செய்துள்ளனர். ஏலம் டிசம்பர் 16, 2026 அன்று கோவாவில் நடைபெறும். இறுதிப் பட்டியல் டிசம்பர் 4 அன்று வெளியாகும்.

IPL 2027: ஐபிஎல் 2027 ஏலத்தில் இதுவரை 1220 வீரர்கள் பதிவு.. விரிவான பட்டியலை வெளியிட்ட பிசிசிஐ!
ஐபிஎல் 2027 ஏலம்Image Source: IPL/X
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 25 Nov 2026 16:31 PM IST

ஐபிஎல் 2027 (IPL 2027) வீரர் ஏலத்திற்காக மொத்தம் 1,220 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் 939 இந்திய வீரர்களும், 17 நாடுகளைச் சேர்ந்த 281 வெளிநாட்டு வீரர்களும் அடங்குவதாக பிசிசிஐ (BCCI) அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. ஏலத்திற்கு முன்னதாக, 10 அணிகளும் மொத்தம் 184 வீரர்களைத் தக்கவைத்துள்ளன அல்லது தேர்ந்தெடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 25 வெளிநாட்டு இடங்கள் உள்பட 66 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. ஐபிஎல் 2027 வீரர் ஏலத்தில் பதிவு செய்துள்ள ஒவ்வொரு நாட்டின் வீரர்களின் அதிகாரப்பூர்வ பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. மேலும், இதில் சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய மற்றும் விளையாடாத இந்திய, வெளிநாட்டு வீரர்களும் பட்டியலிடப்பட்டுள்ளனர்.

ALSO READ: எம்.எஸ். தோனி ஐபிஎல் ஓய்வு.. இஷான் கிஷன் புகழாரம்..!

ஐபிஎல் 2027 ஏலத்தில் பங்கேற்க மொத்தம் 184 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இதுவரை சர்வதேசப் போட்டிகளில் விளையாடாத வீரர்களின் எண்ணிக்கை 994 ஆகும். மேலும், 42 வீரர்கள் அசோசியேட் நாடுகளைச் சேர்ந்தவர்கள். இவர்களில், ஐபிஎல் தொடர்களில் விளையாடிய 127 பேர் உட்பட 925 பேர் இந்தியர்கள் ஆவர்.

ஏலத்தில் பதிவு செய்துள்ள வெளிநாட்டு வீரர்களில் ஆஸ்திரேலியா அதிக எண்ணிக்கையில் உள்ளது. ஆஸ்திரேலியாவிலிருந்து மொத்தம் 53 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். தென்னாப்பிரிக்கா 40 வீரர்களுடன் அடுத்த இடத்தில் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து 36 வீரர்களும், நியூசிலாந்திலிருந்து 25 வீரர்களும் பதிவு செய்துள்ளனர். ஒவ்வொரு நாட்டிலிருந்தும் பதிவு செய்துள்ள வீரர்களின் எண்ணிக்கை மற்றும் பிரிவுகளின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. வீரர்களின் பெயர்ப் பட்டியல் வெளியிடப்படும் தேதியையும் பிசிசிஐ அறிவித்துள்ளது.

1,220 வீரர்கள் 6 பிரிவுகள்:

  • சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர்கள் – 14
  • சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர்கள் – 170
  • அசோசியேட் நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் – 42
  • கடந்த ஐபிஎல் சீசனில் விளையாடிய, சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்காத இந்திய வீரர்கள் – 127
  • அறிமுகம் ஆகாத இந்திய வீரர்கள் – 798
    சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்காத வீரர்கள் – 69

எந்த நாட்டிலிருந்து எத்தனை வீரர்கள் பதிவு செய்தார்கள்?

  • இந்தியா – 939
  • ஆஸ்திரேலியா – 53
  • தென்னாப்பிரிக்கா – 40
  • வெஸ்ட் இண்டீஸ் – 36
  • நியூசிலாந்து – 25
  • ஆப்கானிஸ்தான் – 23
  • இலங்கை – 21
  • இங்கிலாந்து – 16
  • வங்கதேசம் – 12
  • அயர்லாந்து – 7
  • ஜிம்பாப்வே – 6
  • அமெரிக்கா – 13
  • ஐக்கிய அரபு அமீரகம் – 10
  • நேபாளம் – 10
  • நெதர்லாந்து – 3
  • கனடா – 2
  • ஜப்பான் – 2
  • ஸ்காட்லாந்து – 2

ALSO READ: ஐபிஎல் 2027.. இந்த 5 வீரர்களை வெளியேற்ற திட்டம்.. ஷாக் கொடுக்குமா அணிகள்?

வீரர்கள் பட்டியல் எப்போது வெளியிடப்படும்..?

ஐபிஎல் 2027 ஏலத்தில் பதிவு செய்துள்ள வீரர்களில் இருந்து, இறுதி வீரர் பட்டியலில் சேர்க்க விரும்பும் வீரர்களின் பெயர்களை உரிமையாளர்கள் சமர்ப்பிப்பார்கள். வீரர்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் அடிப்படை விலைகளைக் கொண்ட இறுதி ஏலப் பட்டியல் 2026 டிசம்பர் 4ம் தேதி வெளியிடப்படும். இந்த ஏலம் 2026 டிசம்பர் 16ம் தேதி கோவாவில் நடைபெற உள்ளது.

Follow Us