IPL 2027: எம்.எஸ். தோனி ஐபிஎல் ஓய்வு.. இஷான் கிஷன் புகழாரம்..!
MS Dhoni IPL Retirement: எம்.எஸ். தோனியின் ஐபிஎல் ஓய்வு குறித்து ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இஷான் கிஷன் தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார். தோனியின் பங்களிப்பை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்றும், அவர் பல இளம் வீரர்களுக்கு உத்வேகம் அளித்தவர் என்றும் இஷான் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் (Indian Cricket Team) தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தவருமான எம்.எஸ். தோனி (MS Dhoni), சில நாட்களுக்கு முன்பு ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்தநிலையில், எம்.எஸ்.தோனியின் சொந்த மாநிலமான ஜார்க்கண்டைச் சேர்ந்த இஷான் கிஷன், தற்போது இதுகுறித்து தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். தோனியைப் போலவே, இஷானும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். தற்போது, இந்திய டி20 அணியில் முக்கிய வீரராக இருந்து வருகிறார். சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளிலும் இஷான் கிஷன் அணியில் இடம்பெற்றிருந்தார். இந்திய கிரிக்கெட்டுக்கு தோனி நிறைய பங்களித்துள்ளார் என்று இஷான் கூறியுள்ளார்.
ALSO READ: என் வேலை ஈஸியாகும்.. தோனி ஓய்வு குறித்து ஜாகீர் கான் ஓபன் டாக்!




நேரம் வந்துவிட்டது..
Ishan Kishan pays tribute to MS Dhoni after the CSK legend announced his retirement as an IPL player. 💛
https://t.co/zPRfSAjWAZ— Hemant Bhavsar (@hemantbhavsar86) November 23, 2026
பாட்னா விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு ஊடகங்களிடம் பேசிய இஷான் கிஷன், ”தோனி இளம் வீரர்களுக்குப் பெரும் உத்வேகம் அளித்துள்ளார். அவர் ஓய்வு பெற்றுவிட்டார், அதற்கான நேரம் வந்துவிட்டது என்பது எனக்குத் தெரியும். அதுதான் சரியான நேரம் என்று அவர் உணர்ந்தார். ஆனால், அவர் கிரிக்கெட்டுக்கு என்ன பங்களித்துள்ளார் என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்வதுதான் முக்கியம். தோனி எப்படி விளையாடினார் என்பதும், எத்தனை இளம் வீரர்களுக்கு தோனி உத்வேகம் அளித்தார் என்பதும் மிக முக்கியமான விஷயங்கள்.
எம்.எஸ்.தோனி ஓய்வு பெற முடிவெடுத்தபோது வெளிப்படையாகவே அனைவரும் வருத்தமடைந்தனர். அவர் நாட்டிற்காக ஆற்றிய பணி பலரை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. இதைச் செய்யக்கூடிய வீரர்கள் மிகச் சிலரே உள்ளனர்” என்று கூறினார்.
ALSO READ: தோனியின் நம்பர் 7 ஜெர்சி இனி இல்லை.. சிஎஸ்கே எடுத்த முக்கிய முடிவு.. ஏன் தெரியுமா?
5 முறை சாம்பியன்:
எம்.எஸ். தோனியின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறை ஐபிஎல் பட்டத்தை வென்றுள்ளது. 2010, 2011, 2018, 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் தோனியின் தலைமையில் சென்னை ஐபிஎல் பட்டத்தை வென்றது. தோனி இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார். தோனி தலைமையில் இந்தியா 2 உலகக் கோப்பைகளை வென்றுள்ளது. 2007-ல், தோனியின் தலைமையில் இந்தியா தனது முதல் டி20 உலகக் கோப்பையை வென்றது. பின்னர் 2011-ல், தோனியின் தலைமையில் ஒருநாள் உலகக் கோப்பையையும் வென்றது.