AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

T20 Record: டி20 கிரிக்கெட்டில் 181 ரன்கள்.. இந்தியரின் அதிகபட்ச T20 ஸ்கோரை பதிவு செய்த பிரியான்ஷ் ஆர்யா!

Priyansh Arya's Record 181: பிரியான்ஷ் ஆர்யா ஆடவர் டி20 கிரிக்கெட்டில் இந்திய பேட்ஸ்மேன் ஒருவரின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் சாதனையை படைத்துள்ளார். சையத் முஷ்டாக் அலி கோப்பைத் தொடரில் தமிழ்நாடு அணிக்கு எதிராக 68 பந்துகளில் 181 ரன்கள் விளாசி கே.எல். ராகுலின் சாதனையை முறியடித்தார். 19 சிக்ஸர்கள், 36 பந்துகளில் சதம் என அசத்திய அவர், சர்வதேச T20 வரலாற்றிலும் இரண்டாவது அதிகபட்ச தனிநபர் ஸ்கோரர் ஆவார்.

T20 Record: டி20 கிரிக்கெட்டில் 181 ரன்கள்.. இந்தியரின் அதிகபட்ச T20 ஸ்கோரை பதிவு செய்த பிரியான்ஷ் ஆர்யா!
பிரியான்ஷ் ஆர்யாImage Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 24 Nov 2026 17:03 PM IST

ஆடவர் டி20 கிரிக்கெட்டில் (T20 Cricket) ஒரு இந்திய பேட்ஸ்மேன் எடுத்த அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் என்ற சாதனையை பிரியான்ஷ் ஆர்யா (Priyansh Arya) படைத்துள்ளார். இன்று அதாவது 2026 நவம்பர் 24ம் தேதி நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி கோப்பைத் தொடரில், டெல்லி அணிக்காக களமிறங்கிய பிரியான்ஷ் ஆர்யா, தமிழ்நாடு அணிக்கு எதிராக 68 பந்துகளில் 181 ரன்கள் விளாசினார். இதன் காரணமாக டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 275 ரன்கள் குவித்தது. இமாலய இலக்கை துரத்திய தமிழ்நாடு அணி 18.3 ஓவர்களில் 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பிரியான்ஷ் ஆர்யா கே.எல். ராகுலின் சாதனையை முறியடித்தார். 2026ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக கே.எல். ராகுல் 152 ரன்கள் எடுத்தார்.

இதன்மூலம், பிரியான்ஷின் 181 ரன்கள் கொண்ட இன்னிங்ஸ், ஆடவர் டி20 கிரிக்கெட்டில் ஒரு இந்திய பேட்ஸ்மேன் எடுத்த அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் என்ற சாதனையை படைத்தது.  தமிழ்நாட்டிற்கு எதிரான போட்டியில் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய பிரியான்ஷ் ஆர்யா 68 பந்துகளில் 19 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளை அடித்து 181 ரன்கள் எடுத்தார். அவரைத் தவிர, டெல்லி அணியின் வேறு எந்த பேட்ஸ்மேனாலும் 30 ரன்களைக் கூட தாண்ட முடியவில்லை.

ALSO READ: ஹர்ப்ரீத் சிங் 130 ரன்கள்.. இந்திய ஏ அணிக்கு 250 ரன்கள் இலக்கு..!

இந்தியாவுக்கான அதிகபட்ச டி20 ஸ்கோர்

ஆடவர் டி20 கிரிக்கெட்டில், இந்திய அணிக்காக ஒரு தனிநபர் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் தற்போது 181 ரன்களாக உள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக 152 ரன்கள் எடுத்த கே.எல். ராகுல் இரண்டாம் இடத்தில் உள்ளார். 2024-ல் ஹைதராபாத் அணிக்காக 151 ரன்கள் எடுத்த திலக் வர்மா 3ம் இடத்தில் உள்ளார். இந்த மூன்று பேட்ஸ்மேன்களைத் தவிர, டி20 கிரிக்கெட் வரலாற்றில் வேறு எந்த இந்திய பேட்ஸ்மேனும் 150 ரன்கள் என்ற இலக்கை எட்டியதில்லை.

  • 181 ரன்கள் – பிரயான்ஷ் ஆர்யா (டெல்லி)
  • 152 ரன்கள் – கே.எல். ராகுல் (டெல்லி கேப்பிட்டல்ஸ்)
  • 151 – திலக் வர்மா (ஹைதராபாத்)
  • 148 – அபிஷேக் ஷர்மா (பஞ்சாப்)

டி20 கிரிக்கெட்டில் தனிநபர் பிரிவில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீரராக பிரியான்ஷ் தற்போது ஆகியுள்ளார். இதுவரை எந்த வீரரும் 200 ரன்களைத் தாண்டவில்லை. அவரது அதிகபட்ச ஸ்கோர் 188 நாட் அவுட் ஆகும். எனவே, டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் பற்றி தெரிந்து கொள்வோம்.

ALSO READ: பஞ்சாப் அணியில் ஹர்திக் ரோல் என்ன..? ரிக்கி பாண்டிங் ப்ளான் இதுதான்!

டி20-யில் அதிகபட்ச 10 தனிநபர் ஸ்கோர்கள்

  • லுஹான்-ட்ரே பிரிட்டோரியஸ் – 188*
  • பிரியான்ஷ் ஆர்யா – 181 ரன்கள்
  • கிறிஸ் கெய்ல் – 175*
  • ஆரோன் ஃபின்ச் – 172 ரன்கள்
  • ஹம்சா கான் – 164*
  • கரன்பீர் சிங் – 164 ரன்கள்
  • ஹாமில்டன் மசகட்சா – 162*
  • ஹஜ்ரத்துல்லாஹ் ஸஸாயி – 162*
  • சாஹிப்சாதா ஃபர்ஹான் – 162* ரன்கள்

36 பந்துகளில் சதம் அடித்து உலக சாதனை:

தமிழ்நாடு அணிக்கு எதிரான போட்டியில் பிரியான்ஷ் வெறும் 36 பந்துகளில் தனது சதத்தை எட்டினார். இதுமட்டுமின்றி, 181 ரன்களில் 19 சிக்ஸர்களை பறக்கவிட்டிருந்தார். ஆடவர் டி20 கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் ஒரு பேட்ஸ்மேன் அடித்த அதிகபட்ச சிக்ஸர்கள் இதுவாகும். இதன்மூலம், பிரயான்ஷ் ஆர்யா ஜூன் 2025-ல், ஒரு இன்னிங்ஸில் 19 சிக்ஸர்கள் அடித்த ஃபின் ஆலனின் உலக சாதனையை சமன் செய்தார்.

Follow Us