AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வரும் வாரங்களில் அறிமுகமாக வரிசை கட்டி நிற்கும் ஸ்மார்ட்போன்கள்.. லிஸ்ட் இதோ!

New Smartphone Launches in India | இந்தியாவில் பல்வேறு நிறுவனங்கள் தங்களது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில், வரும் வாரங்களில் சில முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளன.

வரும் வாரங்களில் அறிமுகமாக வரிசை கட்டி நிற்கும் ஸ்மார்ட்போன்கள்.. லிஸ்ட் இதோ!
விவோ எக்ஸ்500
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 24 Nov 2026 16:36 PM IST

இந்தியாவில் பல முன்னணி ஸ்மார்ட்போன் (Smartphone) நிறுவனங்கள் தங்களது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில், விவோ (Vivo), iQOO உள்ளிட்ட நிறுவனங்கள் வரும் வாரங்களில் தங்களது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய தயாராகி வருகின்றன. இந்த நிலையில், வரும் வாரங்களில் இந்தியாவில் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய காத்திருக்கும் நிறுவனங்கள் என்ன என்ன, அவை என்ன என்ன மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

விவோ எக்ஸ்500 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள்

விவோ எக்ஸ்500 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் (Vivo X500 Series Smartphones) இந்தியாவில் நவம்பர் 26, 2026 அன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது உறுதியாகியுள்ளது. இந்த சீரீஸில் விவோ நிறுவனம் மொத்தம் மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது, எக்ஸ்500 (X500), எக்ஸ்500 ப்ரோ (X500 Pro) மற்றும் எக்ஸ் 500 ப்ரோ மேக்ஸ் (X500 Pro Max) ஆகிய ஸ்மார்ட்போன்கள் இந்த சீரீஸில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்த ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

இதையும் படிங்க : AI யுகத்தில் ஏன் மனிதநேயத் தலைமைத்துவம் அவசியம்? நிதி ஆயோக்கின் சிறப்பு ஆய்வாளர் தேப்ஜானி கோஷ் விளக்கக் கட்டுரை

ஜியோமி 18 ப்ரோ

ஜியோமி (Xiaomi) நிறுவனம் இந்தியாவில் தனது ப்ரோ மாடலாக ஜியோமி 18 ப்ரோ (Xiaomi 18 Pro) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. ஜியோமி நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனை டிசம்பர் மாதம் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், எந்த தேதியில் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது என்பது குறித்த தகவல் இன்னும் தெரியாமல் உள்ளது.

இதையும் படிங்க : ரூ.1 லட்சத்திற்கு அறிமுகமாகும் ஐபோன் 18?.. வெளியான முக்கிய தகவல்!

iQOO 16

iQOO நிறுவனம் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போனான iQOO 16 ஸ்மார்ட்போனை (iQOO 16 Smartphone) இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நிறுவனம் இந்த மாடல் ஸ்மார்ட்போனை ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்துள்ள நிலையில், தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நிறுவனம் டிசம்பர் மாதத்தில் அமேசான் தளத்தில் தனது இந்த புதிய மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

மேலே குறிப்பிட்ட இந்த மாடல் ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக உள்ள நிலையில், அவற்றின் சிறப்பு அம்சங்கள் மற்றும் விலை குறித்த தகவல்கள் இன்னும் வெளியே வராமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us