AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நோட்டிபிகேஷன் ஆக்ஸஸ் மூலம் நடைபெறும் வங்கி மோசடிகள்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

Prevent Banking Fraud from Notification Access Exploits | தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருவதை போலவே மோசடி மற்றும் குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், பரவால நடைபெறும் நோட்டிபிகேஷன் ஆக்ஸஸ் மோசடி என்றால் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

நோட்டிபிகேஷன் ஆக்ஸஸ் மூலம் நடைபெறும் வங்கி மோசடிகள்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 20 Nov 2026 19:28 PM IST

தற்போதைய காலக்கட்டத்தில் தொழில்நுட்பம் (Technology) எந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்து வருகிறதோ அதே அளவுக்கு மோசடி மற்றும் குற்ற சம்பங்களின் எண்ணிக்கைகளும் அதிகரித்து வருகின்றன. ஸ்மார்ட்போன்களில் (Smartphone) புதிய அம்சங்களை அறிமுகம் செய்யும்போது பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் சில சிறப்பு அனுமதிகளை இயங்குதளம் வழங்கும். ஆனால், இந்த அனுமதிகள் தேவை இல்லாத செயலிகளுக்கு வழங்கப்பட்டாலோ அல்லது கவனம் இல்லாமல் ஆன் செய்யப்பட்டாலோ ஸ்மார்ட்போனில் உள்ள தரவுகள் அந்நிய நபர்களின் கைகளுக்கு சென்று மிகப்பெரிய ஆபத்தை உருவாக்கும் சிக்கல் உள்ளது. எனவே, அது குறித்து மிகவும் கவனமாக செயல்பட வேண்டும் என்பது அவசியமாக உள்ளது.

நோட்டிபிகேஷன் ஆக்ஸஸ் மூலம் நடைபெறும் வங்கி மோசடிகள்

வங்கியின் ஓடிபி (OTP – One Time Password) எண்கள், ரகசிய குறுஞ்செய்திகள் (Secret Messages), வாட்ஸ்அப் உரையாடல்கள் (WhatsApp Chats) மற்றும் வங்கி நோட்டிபிகேஷன்களை (Bank Notifications) திருடக்கூடிய மிகவும் ஆபத்தான நோட்டிபிகேஷன் ஆக்ஸஸ் என்ற அமைப்பு உள்ளது. இது, ஒருவரின் வங்கி தொடர்பான விவரங்களை திருடி அதன் மூலம் மோசடி செய்து வருகிறது. இதன் மூலம் ஏராளமான பொதுமக்கள் தங்களது பணத்தை இழந்துள்ளனர்.

இதையும் படிங்க : வங்கி லாக்கரில் இருக்கும் தங்க நகைகள் காணாமல் போனால் என்ன ஆகும்?

நோட்டிபிகேஷன் ஆக்ஸஸ் என்றால் என்ன?

நோட்டிபிகேஷன் ஆக்ஸஸ் என்பது ஸ்மார்ட்போனுக்கு வரும் அனைத்து வகையான அறிவிப்புக்களையும் வாசிக்கும் ஒரு சிறப்பு அனுமதியாகும். இதன் பயன்பாடு முற்றிலும் வேறுபட்டது ஆகும். அதாவது, வாகனம் ஓட்டும்போதோ அல்லது வேறு ஏதேனும் வேலை செய்துக்கொண்டு இருக்கும்போதோ நமக்கு வரும் குறுஞ்செய்திகளை சத்தமாக படித்துக் காட்ட வாய்ஸ் ரீட் அவுட் (Voice Read Out), ஸ்மார்ட் வாட்ச் (Smart Watch) உடன் இணைப்பதற்காக இந்த அம்சம் உருவாக்கப்பட்டது.

இதையும் படிங்க : 2027 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அறிமுகமாகும் MDR?.. வெளியான முக்கிய தகவல்!

அனுமதி வழங்குவதற்கு முன்பு யோசிக்க வேண்டும்

ஸ்மார்ட்போனில் இந்த அனுமதி வழங்கப்படும் பட்சத்தில் அந்த ஸ்மார்ட்போனுக்கு வரும் புதிய அறிவிப்புகளை படிக்கவும், சேமிக்கவும் அல்லது வெளியே வேறு செயலிகளுக்கு அனுப்பவும் முடியும். எனவே இது மிகவும் முக்கியமான அம்சமாக உள்ளது. இந்த அம்சத்தை தவறாக பயன்படுத்தி அதன் மூலம் மோசடிகள் அரங்கேறி வருகிறது. எனவே, ஸ்மார்ட்போனில் இந்த அம்சத்திற்கு அனுமதி வழங்கும்போது குறித்து கவனமாக இருக்க வேண்டும்.

Follow Us