AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

எதிர்கட்சியை சேர்ந்தவர்கள் மீது உடனடி வழக்கு – அரசு அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை இல்லை – நீதிமன்றம் கேள்வி

Fake Book Scam Row : பெயர் தெரியாத பதிப்பகங்களிடம் புத்தகங்களை கொள்முதல் செய்ய ஆணை பிறப்பித்தது யார்? இந்த விவகாரத்தில் தொடர்புடைய அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் மீது ஏன் இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை? என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

எதிர்கட்சியை சேர்ந்தவர்கள் மீது உடனடி வழக்கு – அரசு அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை இல்லை – நீதிமன்றம் கேள்வி
சென்னை உயர்நீதிமன்றம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 20 Nov 2026 19:05 PM IST

சென்னை, நவம்பர் 20 : காவல் துறை தரப்பு வழக்கறிஞரிடம், அரசு அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகளின் உதவியின்றி எப்படி அரசியல்வாதிகளால் லஞ்சம் பெற முடியும்? என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பினார். பெயர் தெரியாத பதிப்பகங்களிடம் புத்தகங்களை கொள்முதல் செய்ய ஆணை பிறப்பித்தது யார்? இந்த விவகாரத்தில் தொடர்புடைய அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் மீது ஏன் இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை? என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court) கேள்வி எழுப்பியுள்ளது.

அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை இல்லை என நீதிமன்றம் கேள்வி

திருவள்ளூரில் நடைபெற்ற ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தவெக தெற்கு மாவட்ட செயலாளரும், பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ-வுமான பிரகாசம் என்கிற குட்டி உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது, அக்கட்சியின் மகளிர் அணியைச் சேர்ந்த ஒருவரிடம் பிரகாசம் தவறான முறையில் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையும் படிக்க : கார்த்திகை மகா தீபம்! திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள்.. நாளை முன்பதிவு தொடக்கம்!

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் திருவள்ளூர் காவல் கண்கானிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில், திருவள்ளுவர் நகர் காவல் துறையினர் எம்.எல்.ஏ பிரகாசம் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி பிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்று கொண்ட நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கின் போது, பெரியார் அறிவுலகம் தொடர்பான வழக்கை குறிப்பிட்டு பேசிய நீதிபதி, காவல்துறை தரப்பு வழக்கறிஞரிடம், அரசு அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகளின் உதவியின்றி எப்படி அரசியல்வாதிகளால் லஞ்சம் பெற முடியும்? பெயர் தெரியாத பதிப்பகங்களுக்கு புத்தகங்களை கொள்முதல் செய்ய ஆணை பிறப்பித்தது யார்? என கேள்வி எழுப்பினார்.

மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை? குற்றம் சாட்டப்பட்டவர் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் என்றால், காவல்துறை வேகமாக செயல்படுகிறது என கேள்வி எழுப்பினார். அதற்கு காவல் துறை தரப்பில், புத்தக கொள்முதல் முறைகேடு தொடர்பாக ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு, விசாரணை நடத்தி வருவதாவும், நவம்பர் 23, 2026 ஆம் தேதி இது குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்வதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையும் படிக்க : சோலார் பேனல் வைப்பவர்களுக்கு குட்நியூஸ்.. கட்டண விலக்கு வழங்க முடிவு – வெளியான தகவல்

இதற்கிடையில் லஞ்ச வழக்கில் சிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசின் முன் அனுமதி தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. மேலும், பொது ஊழியர் தனது அலுவல் கடமைகளை நிறைவேற்றும்போது செய்த பரிந்துரை அல்லது எடுத்த முடிவு தொடர்பான சூழ்நிலைகளில் மட்டுமே முன் அனுமதி சட்டப்பிரிவு பொருந்தும். லஞ்சம் கோருவது அலுவல் பணிகளுடன் தொடர்புடையதல்ல என தெரிவித்துள்ளது.

 

Follow Us