AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ரூ.700 கோடி ஹெராயின் பறிமுதல்! ஐஸ்கிரீம் வியாபாரிக்கு சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்பு.. வெளிவந்த பகீர் தகவல்!

Madhavaram Heroin Seizure : சென்னையில் ரூ. 700 கோடி ஹெராயின் போதைப் பொருள் கடத்தல் சம்பவத்தில் கைதான ஐஸ்கிரீம் வியாபாரிக்கு சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருந்தது தெரியவந்ததுள்ளது . இதில், பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன .

ரூ.700 கோடி ஹெராயின் பறிமுதல்! ஐஸ்கிரீம் வியாபாரிக்கு சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்பு.. வெளிவந்த பகீர் தகவல்!
ஹெராயின் பறிமுதல் வழக்கு.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 20 Nov 2026 15:29 PM IST

சென்னை மாவட்டம், மாதவரம் பகுதியில் ஹெராயின் போதைப் பொருள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், மாதவரம் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்ட போது, ஐஸ்கிரீம் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு சென்று கொண்டிருந்த வாகனத்தை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்ததில், ஐஸ் பெட்டிக்குள் மேல்பகுதியில் ஐஸ்கிரீம்கள் வைத்து அதற்கு கீழ்ப்பகுதியில் அதிக அளவிலான ஹெராயின் போதை பொருட்களை கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதில், சுமார் 70 கிலோ போதைப் பொருட்களை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அத்துடன், அந்த வாகனத்தை ஓட்டி வந்த அப்துல் ஷூக்கூர், சபீர் அகமது ஆகிய இருவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஹெராயின் கடத்திய ஐஸ்கிரீம் வியாபாரி

இதில், இருவரும் சென்னை மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அத்துடன், அவர்களுக்கு சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பது இன்று அதிர்ச்சி தகவலும் கண்டுபிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட 70 கிலோ ஹெராயின் மதிப்பு ரூ.700 கோடி என்று வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சர்வதேச கடத்தல் கும்பலுடன் ஐஸ்கிரீம் வியாபாரிக்கு தொடர்பு ஏற்பட்டது எப்படி என்பது தொடர்பாக வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.

மேலும் படிக்க: தமிழகத்தில் என்னதான் நடக்கிறது? கன்னியாகுமரியில் 14 வயது சிறுமி மாயம்.. களத்தில் இறங்கிய 2 தனிப்படைகள்!

சர்வதேச கடத்தல் கும்பலுடன் எப்படி தொடர்பு

இதில், அதிர்ச்சி அளிக்கும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, தேனியை சேர்ந்த ஐஸ்கிரீம் வியாபாரியான அப்துல் சுக்கூருக்கு மருத்துவ செலவு ஏற்பட்டுள்ளது. இதற்கு ரூ. 50 ஆயிரம் தேவை என்ற நிலையில், அந்த தொகையை சர்வதேச கடத்தல் கும்பல் அவருக்கு கொடுத்து உதவியுள்ளது. இதற்கு பயனாக ஐஸ்கிரீம் வியாபாரியை ஹெராயின் கடத்தலுக்கு பயன்படுத்தி உள்ளது. இதற்காக, ஐஸ்கிரீம் வியாபாரி அப்துல் சுக்கூருக்கு ரூ. 3 லட்சம் கூடுதலாக வழங்கவும் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல் உறுதி அளித்துள்ளது.

கடத்தலில் தொடர்புடைவர்களுக்கு வலை வீச்சு

இதையெல்லாம் கேட்ட ஐஸ்கிரீம் வியாபாரி அவர்கள் கூறியது போல சென்னையில் திருச்சி வழியாக இலங்கைக்கு ரூ. 700 கோடி மதிப்பிலான 70 கிலோ ஹெராயின் போதை பொருள்களை கடத்தி சென்றது தெரியவந்தது. அத்துடன், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய மேலும் சிலரை பிடிக்க வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனிடையே, கைது செய்யப்பட்ட 2 பேரும் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் படிக்க: ஒரே மகளின் வாழ்க்கை சரியாக அமையவில்லை.. எங்கள் சாவுக்கு யாரும் காரணமில்லை! 5 பேர் உயிரிழப்பில் சிக்கிய உருக்கமான கடிதம்!

Follow Us