ஒரே மகளின் வாழ்க்கை சரியாக அமையவில்லை.. எங்கள் சாவுக்கு யாரும் காரணமில்லை! 5 பேர் உயிரிழப்பில் சிக்கிய உருக்கமான கடிதம்!
Karur 5 Bodies Recoverd Incident : கரூரில் விவசாய கிணற்றில் 5 பேர் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்தில் உருக்கமான கடிதம் போலீசார் வசம் சிக்கி உள்ளது. அதில், அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளனர். அது என்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கரூர் மாவட்டம், வெங்கமேடு பகுதி கொங்கு நகரில் வசித்து வந்தவர் ராமசாமி. இவரது மனைவி ஜானகி. தம்பதிக்கு கண்ணன் என்ற மகனும், சுகுணா என்ற மகளும் இருந்தனர். சுகுணாவுக்கும், வேலாயுதம்பாளையத்தில் சேர்ந்த பிரபு என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு, சிவானி, ஆதிரன் என்ற இரு குழந்தைகள் இருந்தனர். இந்த நிலையில், சுகுணாவுக்கு, அவரது கணவர் பிரபுவுக்கும் இடையே குடும்பத்த தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதேபோல, கடந்த நவம்பர் 15- ஆம் தேதி மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு பிரச்சினையாக மாறியுள்ளது. இதனால், மனமுடைந்த சுகுணா தனது இரு குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். தொடர்ந்து, ராமசாமி, அவரது மனைவி, சுகுணா அவரது குழந்தைகள் ஆகியோர் வெளியே சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை.
விவசாய கிணற்றில் 5 பேர் சடலம் மீட்பு
இந்த நிலையில், ராமசாமிக்கு சொந்தமான சின்ன காளிபாளையத்தில் உள்ள விவசாயி கிணற்றில் 5 பேரும் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், இது தொடர்பாக வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், ஐந்து பேரின் உடல்களும் அவர்களது இடுப்பு கயிறால் இணைக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, ராமசாமி வீட்டில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில், நாங்கள் 5 பேரும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மகன் கண்ணனுக்கு, ராமசாமி எழுதிய போலீசாருக்கு கிடைத்தது.
மேலும் படிக்க: ஸ்டாலின் வெற்றியை பறித்தவர்! புரசை பாபு முதல் கொளத்தூர் எம்எல்ஏ பதவி வரை.. வி.எஸ்.பாபு கடந்து வந்த பாதை!
போலீசாரிடம் சிக்கிய உருக்கமான கடிதம்
அதில், எனது ஒரே மகளின் வாழ்க்கை சரியாக அமையவில்லை. இதனால், நாங்கள் பெரும் மன கஷ்டத்துக்கு ஆளாகியுள்ளோம். இதனால், நாங்கள் அனைவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளோம். எங்கள் தற்கொலைக்கு யாரும் காரணம் கிடையாது. நாங்கள் வாங்கிய கடனுக்கு சொத்தை விற்று கடனை அடைக்குமாறு அதில் எழுதப்பட்டிருந்தது. அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்ற கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மனைவியிடம் பணம் கேட்டு தொல்லை செய்த கணவர்
முன்னதாக, சுகுணாவின் கணவர் பிரபு தொடர்பாக போலீசார் விசாரித்ததில், அவர் கார் புரோக்கர் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அதில், நஷ்டம் ஏற்பட்டதால் மனைவி வீட்டிலிருந்து பணம் வாங்கி வருமாறு வற்புறுத்தி உள்ளாராம். இதனால், தனது தந்தையிடமிருந்து சுகுணா பணத்தை வாங்கி கணவரிடம் கொடுத்துள்ளார். இதில், இருவருடைய பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால், தீபாவளியன்று தாய் வீட்டுக்கு சென்ற சுகுணா, கணவருடன் வாழ விருப்பம் இல்லை என்று தெரிவித்ததை தொடர்ந்து, இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் படிக்க: 70 நாள்கள் நீடித்த மர்மம்! ஹைகோர்ட்டில் நேற்று பொதுநல மனு.. இன்று வி.எஸ். பாபுவின் மரண அறிவிப்பு.. என்ன நடந்தது!