AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ரூ.2.86 லட்சம் வரை சம்பளம் – வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு – தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு

Tamil Nadu Government UAE Jobs : ஐக்கிய அரபு நாடுகளில் பல்வேறு துறைகளில் பணிபுரிவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் ரூ.2.86 லட்சம் வரை ஊதியம் பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

ரூ.2.86 லட்சம் வரை சம்பளம் – வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு – தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு
மாதிரி புகைப்படம்Image Source: pinrest
Karthikeyan S
Karthikeyan S | Published: 19 Nov 2026 21:04 PM IST

சென்னை, நவம்பர் 19 :  ஐக்கிய அரபு நாடுகளில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பை தமிழக அரசு வழங்கியுள்ளது. பல்வேறு துறைகளில் பணிபுரிவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை தமிழக அரசு (TN Government) அறிவித்துள்ளது. இதன் மூலம் ரூ.2.86 லட்சம் வரை ஊதியம் பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பு மற்றும் விண்ணப்பிக்கும முறை உள்ளிட்டவை குறித்து விரிவாக பார்க்கலாம்.

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்  எலக்ட்ரிஷியன் உதவியாளர், இன்ஸ்ட்ரூமென்டேஷன் தொழில்நுட்ப வல்லுநர், எலக்ட்ரிஷியன், எலக்ட்ரிகல் ஃபிட்டர், எலக்ட்ரிகல் சூப்பர்வைசர் , மின்சாரப் பணிகளுக்கான ஃபோர்மேன் பராமரிப்புப் பொறியாளர் (Operation & Maintenance Engineer), டெஸ்டிங் அண்ட் கமிஷன் இன்ஜினியர். விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க : கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு மறைவு…. திருச்சியில் முதல்வர் விஜய்யின் நிகழ்ச்சி ரத்து

தகுதி என்ன?

ஐக்கிய அரபு நாடுகளில் பணிபுரிய ITI / Diploma / B.E., / B.Tech., in Electrical and Electronics Engineering (EEE) / Instrumentation Engineer  ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற 22 முதல் 40 வயதுக்குட்பட்ட குறைந்தது 6 மாத பணி அனுபவம் கொண்ட எலக்ட்ரிஷியன் உதவியாளர்  பணிக்கு மாத ஊதியமாக ரூ. 32,000 முதல் ரூ. 36,000 வரையும், 3 வருட பணி அனுபவம் கொண்ட எலக்ட்ரிஷியன் பணிக்கு ரூ. 36,000 முதல் ரூ. 52,000 வரையும் , எலக்ட்ரிஷியன் ஃபிட்டர் பணிக்கு ரூ. 40,000 முதல் ரூ. 52,000 வரையும், இன்ஸ்ட்ரூமெண்டேஷன் டெக்னிஷியன் பணிக்கு ரூ. 65,000 முதல் ரூ. 1,04,000 வரையும் ஊதியமாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு

 

இதில் கூடுதல் நேரம் பணிபுரியும் நபர்களுக்கு அதற்கான கூடுதல் நேரப் பணிக்கான ஊதியமும் வழங்கப்படும்.
மேலும், 25 முதல் 45 வயதிற்குள்பட்ட 5 வருட பணி அனுபவம் கொண்ட எலக்ட்ரிகல் ஃபோர்மேன் (Electrical Foreman) பணிக்கு ரூ. 65,000 முதல் ரூ. 91,000 வரையும், Electrical Supervisor பணிக்கு ரூ. 78,000 முதல் ரூ. 1,43,000 வரையும், ஆபரேஷன் மற்றும் மெயின்டனென்ஸ் இன்ஜினியர்(Operation & Maintenance Engineer) பணிக்கு ரூ. 1,30,000 முதல் ரூ. 2,60,000 வரையும், டெஸ்டிங் அண்ட் கமிஷனிங் இன்ஜினியர் (Testing and Commissioning Engineer ) பணிக்கு ரூ. 1,04,000 முதல் ரூ. 2,86,000 வரையும் மாத ஊதியமாக வழங்கப்படும்.

இதையும் படிக்க : 70 நாள்கள் நீடித்த மர்மம்! ஹைகோர்ட்டில் நேற்று பொதுநல மனு.. இன்று வி.எஸ். பாபுவின் மரண அறிவிப்பு.. என்ன நடந்தது!

எப்படி விண்ணப்பிப்பது?

விசா மற்றும் இருப்பிடம் ஆகியவை வேலை அளிப்பவரால் வழங்கப்படும். மேற்குறிப்பிட்ட பணிக்கு செல்பவர்கள் விசா கிடைத்த பின்னர் இந்நிறுவனத்திற்கு சேவைக் கட்டணமாக ரூ. 35,400/- மட்டும் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு செல்ல விருப்பமுள்ள ஆண் பணியாளர்கள் ovemclnm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுயவிவரம் அடங்கிய விண்ணப்படிவம், கல்வி, பணி அனுபவ சான்றிதழ், பாஸ்போர்ட் நகல்  ஆகியவற்றை 5.12.2026ஆம் தேதிக்குள் அனுப்பவும்.

இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன இணையதளம் www.omcmanpower.tn.gov.in (044-22502267) & வாட்ஸ்ஆப் எண் (95662 39685) வாயிலாக அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us