கார்த்திகை தீபம்…. – திருவண்ணாமலைக்கு 16 மெமு ரயில்கள் அறிவிப்பு – எங்கெல்லாம் தெரியுமா?
Tiruvannamalai Deepam 2026 : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 24, 2026 அன்று வெகு சிறப்பாக கொண்டாடப்படவிருக்கிறது. இதனை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக 16 மெமு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, நவம்பர் 19 : பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில், திருக்கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 12, 2026 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி நவம்பர் 28, 2026 வரை நடைபெறுகிறது. இதில் முக்கி நிகழ்வான கார்த்திகை மகா தீப திருவிழா நவம்பர் 24, 2026 அன்று வெகு சிறப்பாக கொண்டாடப்படவிருக்கிறது. இந்த நிகழ்வில் பங்கேற்க தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பக்தர்களின் வசதிக்காக 16 மெமு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 16 மெமு ரயில்கள்
1. சென்னை கடற்கரை – திருவண்ணாமலை மெமு (06143)
சென்னை கடற்கரையிலிருந்து 2026 நவம்பர் 23, 24, 25 ஆகிய தேதிகளில் காலை 6.20 மணிக்கு புறப்பட்டு காலை 11.40 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். இந்த ரயில் பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, வேலூர் கான்ட் ஆகிய வழித்தடங்கள் வழியாக செல்லும்.
2. திருவண்ணாமலை – சென்னை கடற்கரை மெமு (06144)
இதனையடுத்து மறுமார்க்கமாக திருவண்ணாமலையிலிருந்து 2026 நவம்பர் 23, 24, 25 ஆகிய தேதிகளில் இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 4.30 மணிக்கு சென்னை கடற்கரை சென்றடையும்.இந்த ரயில் வேலூர் கான்ட், காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் ஆகிய வழித்தடங்களில் நின்று செல்லும்.




இதையும் படிக்க : சென்னையில் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள்.. சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வாய்ப்பு! விண்ணப்பிப்பது எப்படி?
3. திருவண்ணாமலை – காட்பாடி மெமு (06145)
திருவண்ணாமலையிலிருந்து 2026 நவம்பர் 23, 24, 25 ஆகிய தேதிகளில் பகல் 12.35 மணிக்கு புறப்பட்டு மாலை 3 மணிக்கு காட்பாடி சென்றடையும். இந்த ரயில் போளூர், ஆரணி சாலை, வேலூர் கான்ட் ஆகிய வழித்தடங்களில் நின்று செல்லும்.
4. காட்பாடி-திருவண்ணாமலை மெமு சிறப்பு (06146)
மேலும் காட்பாடியிலிருந்து 2026 நவம்பர் 23, 24, 25 ஆகிய தேதிகளில் மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.இந்த ரயில் போளூர், ஆரணி சாலை, வேலூர் கான்ட் ஆகிய வழித்தடங்களில் நின்று செல்லும்.
5. திருவண்ணாமலை – காட்பாடி சிறப்பு (06147)
திருவண்ணாமலையிலிருந்து 2026 நவம்பர் 23, 24, 25 ஆகிய தேதிகளில் மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 8 மணிக்கு காட்பாடி சென்றடையும். இந்த ரயில் வேலூர், ஆரணி சாலை, போளூர், ஆகிய வழித்தடங்களில் செல்லும்.
6. காட்பாடி – திருவண்ணாமலை மெமு சிறப்பு (06148)
காட்பாடி யிலிருந்து 2026 நவம்பர் 23, 24, 25 ஆகிய தேதிகளில் இரவு 8.55 மணிக்கு புறப்பட்டு இரவு 11.05 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.இந்த ரயில் போளூர், ஆரணி சாலை, வேலூர் ஆகிய வழித்தடங்களில் செல்லும்.
7. தாம்பரம் – திருவண்ணாமலை மெமு (06093)
சென்னை தாம்பரத்திலிருந்து 2026 நவம்பர் 23, 24, 25 ஆம் தேதிகளில் காலை 9.15 மணிக்கு புறப்பட்டு பகல் 1.30 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், திருக்கோயிலூர் நிலையங்களில் மட்டுமே நிற்கும்.
8. திருவண்ணாமலை -தாம்பரம் மெமு (06094)
திருவண்ணாமலையிலிருந்து 2026 நவம்பர் 23, 24, 25 ஆம் தேதிகளில் இரவு 10.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 2.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
9. திருவண்ணாமலை – விழுப்புரம் மெமு (06097)
திருவண்ணாமலையிலிருந்து 2026 நவம்பர் 23, 24, 25 ஆம் தேதிகளில் மாலை 6.20 மணிக்கு புறப்பட்டு இரவு 7.40 மணிக்கு விழுப்புரம் சென்றடையும். இந்த ரயில் திருக்கோயிலூரில் மட்டுமே நிற்கும்
10. விழுப்புரம் திருவண்ணாமலை மெமு (06098)
விழுப்புரத்திலிருந்து 2026 நவம்பர் 23, 24, 25 ஆம் தேதிகளில் இரவு 8.00 மணிக்கு புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.
11. திருவண்ணாமலை – விழுப்புரம் மெமு (06095)
திருவண்ணாமலையிலிருந்து 2026 நவம்பர் 23, 24, 25 ஆம் தேதிகளில் மாலை 3 மணிக்கு புறப்பட்டு மாலை 4.20 மணிக்கு விழுப்புரம் சென்றடையும். இந்த ரயில் திருக்கோயிலூரில் மட்டுமே நிற்கும்
12. விழுப்புரம்-திருவண்ணாமலை மெமு (06096)
விழுப்புரத்திலிருந்து 2026 நவம்பர் 23, 24, 25 ஆம் தேதிகளில் மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு மாலை 6.00 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.
இதையும் படிக்க : கார்த்திகை தீபத்திருவிழா! திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.. முழு விவரம்!
13. திருவண்ணாமலை – விழுப்புரம் மெமு (06129)
திருவண்ணாமலையிலிருந்து 2026 நவம்பர் 23, 24, 25 ஆம் தேதிகளில் பகல் 12.40 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2.15 மணிக்கு விழுப்புரம் சென்றடையும். இந்த ரயில் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், ஆண்டம்பாளையம், தண்டரை ஆகிய வழித்தடங்களில் செல்லும்.
14. விழுப்புரம் திருவண்ணாமலை மெமு (06130)
விழுப்புரத்திலிருந்து 2026 நவம்பர் 23, 24, 25 ஆம் தேதிகளில் காலை 10.10 மணிக்கு காலை 11.45 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.
15. விழுப்புரம் வேலூர் கான்ட் மெமு (06062)
விழுப்புரத்தில் இருந்து 2026 நவம்பர் 23, 24, 25 ஆம் தேதிகளில் இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 1.45 மணிக்கு வேலூர் கான்ட் சென்றடையும்.
16. வேலூர் கான்ட் – விழுப்புரம் மெமு (06061)
வேலூரிலிருந்து இருந்து 2026 நவம்பர் 23, 24, 25 ஆம் தேதிகளில் அதிகாலை 2.05 மணிக்கு புறப்பட்டு காலை 5.00 மணிக்கு விழுப்புரம் சென்றடையும்.