AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி. எஸ். பாபு காலமானார்!

kolathur Mla V.S. Babu Passed Away : உடல் நலக்குறைவால் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி. எஸ். பாபு மரணமடைந்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி. எஸ். பாபு காலமானார்!
தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 19 Nov 2026 15:50 PM IST

சென்னை கொளத்தூர் தொகுதியின் தமிழக வெற்றுக் கழகத்தின் எம்எல்ஏவாக இருந்து வந்தவர் வி. எஸ். பாபு. இவருக்கு, கடந்த செப்டம்பர் 9- ஆம் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில், அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால், அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். தொடர்ந்து, இன்றுடன் 71- ஆவது நாளாக  அவருக்கு வீடு கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், இன்று வியாழக்கிழமை ( நவம்பர் 19- ஆம் தேதி) பிற்பகல் திடீரென மரடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக, மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், சிகிச்சை பலன் இன்றி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு மரணமடைந்தார். அவரது உயிர்  இன்று பிற்பகல் 2:24 மணிக்கு பிரிந்தது.

கை கொடுக்காத உயிர் காக்கும் சிகிச்சை

முன்னதாக அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சையை பலதரப்பு மருத்துவர்கள் மேற்கொண்டிருந்தனர். ஆனால், தீவிர சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. இவர், கடந்த 2006 சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் புரசைவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். 2011-ஆம் ஆண்டு திமுக தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தி.மு.க.வில் இருந்து வி. எஸ். பாபு விலகினார்.

மேலும் படிக்க: தமிழகத்தில் என்னதான் நடக்கிறது? கன்னியாகுமரியில் 14 வயது சிறுமி மாயம்.. களத்தில் இறங்கிய 2 தனிப்படைகள்!

திமுக, அதிமுக, அமமுகவில் பயணித்தவர்

இதைத் தொடர்ந்து, அவர் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அதிமுகவில் இருந்து விலகிய வி.எஸ். பாபு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்து பயணிக்க தொடங்கினார். இதைத் தொடர்ந்து, தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த அவர், அண்மையில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக தலைவரும், முன்னாள் முதல் அமைச்சருமான மு. க. ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்டார்.

Hospital Press Lease

மருத்துவமனை அறிக்கை.

மு.க.ஸ்டாலினை வீழ்த்தி வெற்றி பெற்றவர்

இதில், மு. க. ஸ்டாலினை விட அதிக அளவிலான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தொடர்ந்து, சட்டமன்றத்தில் எம்எல்ஏவாக அடி எடுத்து வைத்த எம்எல்ஏ வி. எஸ். பாபு  கடந்த ஆகஸ்ட் முதல் செப்டம்பர் மாதம் வரை நடைபெற்ற தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில்  பங்கேற்று இருந்தார். அப்போதே, அவருக்கு  உடல்நலக்குறைவு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், செப்டம்பர் 9- ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: கார்த்திகை தீபத்திருவிழா! திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.. முழு விவரம்!

Follow Us