AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

OM & AOT.. தங்களின் படங்களுக்கு ஒன்றாக ப்ரோமஷன் செய்த மம்முட்டி – துல்கர் சல்மான்!

Dulquer Salmaan vs Mammootty: தென்னிந்திய சினிமாவில் இந்த 2026ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பல படங்கள் பேக் டூ பேக் வெளியாக காத்திருக்கிறது. அந்த விதத்தில் துல்கர் சல்மான் நடித்த AOT மற்றும் அவரின் தந்தை மம்முட்டி தமிழில் நடித்த O.M என இரு படங்களும் ஒரே நாளில் வெளியாகிறது. இது குறித்து இருவரும் ப்ரோமோஷன் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது.

OM & AOT.. தங்களின் படங்களுக்கு ஒன்றாக ப்ரோமஷன் செய்த மம்முட்டி – துல்கர் சல்மான்!
துல்கர் சல்மான் மற்றும் மம்முட்டிImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 19 Nov 2026 15:26 PM IST

தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாக இருந்துவருபவர் துல்கர் சல்மான் (Dulquer Salmaan). இவர் மலையாள சினிமாவில் முன்னணி நாயகனாக அறிமுகமானாலும், தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஹீரோவாக படங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக ஐஆம் கேம் (Im Game Movie) என்ற திரைப்படமானது வெளியானது. மலையாளத்தில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகியிருந்த இந்த திரைப்படமானது இவருக்கு ஓரளவு வரவேற்பை கொடுத்தது. இதையடுத்து தெலுங்கு இயக்குநர் பவன் சடினேனி இயக்கத்தில் துல்கர் நடித்துவந்த திரைப்படம்தான் ஆகாசம்லோ ஒக்க தாரா (Aakasamlo Oka Tara Movie). இந்த படமானது வரும் 2026 நவம்பர் 20ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. அதே தேதியில் துல்கர் சல்மானின் தந்தை மம்முட்டி (Mammootty) மற்றும் தனுஷ் (Dhanush) தமிழில் நடித்துள்ள ஓ.எம் திரைப்படமும் (O.M Movie) வெளியாகிறது.

அப்பா மற்றும் மகன் மோதலாக இந்த படம் அமைந்துள்ளது. அந்த விதத்தில், துல்கர் சல்மான் மற்றும் மம்முட்டி இருவருமே அவர் அவர் படங்களை ப்ரோமோஷன் செய்யும் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது. இதை ஓ.எம் படக்குழு பகிர்ந்துள்ளது.

இதையும் படிங்க: நிறைவடைந்தது இரண்டு வானம் படத்தின் டப்பிங்… படக்குழு கொடுத்த சூப்பர் அப்டேட்!

மம்முட்டி மற்றும் துல்கர் சல்மான் ப்ரோமோஷன் குறித்து ஓ.எம் படக்குழு பகிர்ந்த எக்ஸ் பதிவு:

இந்த பதிவில் மம்முட்டி மற்றும் துல்கர் சல்மான் இருவரும் இணைந்து பேசுவதுபோல காட்டப்பட்டுள்ளது. மம்முட்டி, துல்கர் சல்மான் நடித்துள்ள ஆகாசம்லோ ஒக்க தாரா படம் நாளை (20/11/2026) உலகமெங்கும் வெளியாகிறது என தெலுங்கில் கூறுவதுபோன்றும். அதன் பிறகு வந்த துல்கர் சல்மான், அது கூடவே ஓம் திரைப்படம் நாளைக்கு உலகமெங்கும் வெளியாகிறது என கூறியிருந்தார்.

இதையும் படிங்க: நா அது ப்ராங்க் கால்னு நினச்சேன்… நடிகை ஸ்ரீலீலா சொன்ன சுவாரஸ்யமான விசயம்!

தற்போது இந்த வீடியோவானது வெளியாகி இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது. மேலும் அப்பா மற்றும் மகன் இருவருமே அவர் அவர் படங்களை இணைந்து ப்ரோமோஷன் செய்துள்ளனர் என ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டுவருகிறது.

மம்முட்டியின் ஓ.எம் திரைப்படம்:

நடிகர் மம்முட்டி கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் புதிதாக திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க, தனுஷ் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் தனுஷுடன் மிகவும் முக்கியமான வேடத்தில் மம்முட்டி நடித்துள்ளார். இப்படத்தில் மெயின் வில்லன் மம்முட்டிதான் என கூறப்படுகிறது. இந்த படமானது மிகவும் பிரம்மாண்டமான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், 2026 நவம்பர் 20ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us