O.M Movie: தனுஷின் ஓ.எம் திரைப்படம் வெளியாகுவதில் ஏற்பட்ட சிக்கல்.. என்னனு தெரியுமா?
OM Movie Release Issue: கோலிவுட் சினிமாவில் சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் தனுஷ். இவரின் நடிப்பில் ஓ.எம் படமானது 2026 நவம்பர் 20ல் வெளியாக காத்திருக்கிறது. இந்நிலையில் தற்போது திரையரங்கு விநோயாக பிரச்சனையின் காரணமாக இப்படம் வெளியாகுவதில் சிக்கல் எழுந்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் (Director Rajkumar Pariasamy) இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள புதிய திரைப்படம்தான் ஓ.எம் (O.M Movie). இந்த படத்தில் ஹீரோவாக நடிகர் தனுஷ் (Dhanush) நடிக்க, அவருடன் மிகவும் முக்கியமான வேடத்தில் நடிகர் மம்முட்டி நடித்துள்ளார். மலையாள ஸ்டார் மம்முட்டி (Mammootty) தமிழில் கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு பிறகு நடித்துள்ள படமாக இந்த ஓ.எம் திரைப்படம் அமைந்துள்ளது. இந்த படத்தில் தனுஷ் ஒரு ரகசிய உளவாளியாக நடித்துள்ளார். இருவருக்கு ஜோடியாக இப்படத்தில் நடிகை ஸ்ரீலீலா (Sreeleela) நடித்துள்ளார். மேலும் நடிகை சாய் பல்லவி (Sai Pallavi) இப்படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
செம்மர கடத்தல் மற்றும் மாஃபியா கதைக்களத்தில் இப்படமானது உருவாக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 2026ம் ஆண்டு நவம்பர் 20 தேதியில் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது. அந்த விதத்தில் இப்படத்தின் வெளியீட்டில் சிக்கல் எழுந்துள்ளது.




இதையும் படிங்க: ஓ.எம் பட காலை 6 மணி FDFS.. தமிழக முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்து தனுஷ் வெளியிட்ட பதிவு!
தனுஷின் ஓ.எம் திரைப்படத்தின் வெளியீட்டில் ஏற்பட்ட சிக்கல் :
தனுஷின் இந்த ஓம் திரைப்படமானது அதிரடியான ஆக்ஷன் மற்றும் கிரைம் திரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ஏஜிஎஸ் சினிமாஸ் நிறுவனமானது வாங்கியுள்ள நிலையில், அந்த நிறுவனமே தமிழகத்தில் உள்ள பல்வேறு திரையரங்குகளுக்கு ஓ.எம் படத்தை விநியோகம் செய்கிறது. அந்த விதத்தில் திரையரங்குகள் உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மத்தியில் சதவீத பங்கிற்கான பிரச்சனைகள் இருந்துவருகிறதாம். அதனால் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் உள்ள தனி திரையரங்குகளில் ஓ.எம் படம் வெளியாகுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: புலி பட இயக்குநரின் நவோரியா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
இந்த படத்தை மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளுக்கு 20 சதவீதமும், ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு 80 சதவீதமாக பேசிமுடிக்கப்பட்டதாம். ஆனால் தனி திரையரங்குகளுக்கு 30 சதவீதம் / 70 சதவீதம் என பேசிமுடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த படமானது சில திரையரங்குகளில் மட்டுமே வெளியாகாமல் போகுமே தவிர, முழுவதுமாக ரிலீஸ் ஆகாமல் போகாது என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷின் ஓ.எம் திரைப்படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:
Two days before we get started with the story of these two men 🔥
#OM in theatres worldwide from Friday, November 20.
BMS: https://t.co/q6sY4YxNkT
District: https://t.co/pPvVf9SXpi
A @Rajkumar_KP Film
@dhanushkraja @mammukka @Sai_Pallavi92 @SaiAbhyankkar #NaseeruddinShah @sreeleela14 #Indrans @RTakeStudios @wunderbarfilms @Shra2309 @azy905 @theSreyas @sandy_sashr @vishurams @Ezhil_DOP @kalaivananoffl @iamSandy_Off @kavya_sriram @kabilanchelliah @rajeevan69 @JamRokr @kuchirayar73 @HariSounddesign @Synccinema @agscinemas @archanakalpathi @aishkalpathi @PharsFilm @SitharaEnts @WarnerMusicIN #BinuGeorgeAlexander @DreamBig_film_s @jsujithnair @PenMovies #PenMarudhar @ThinkStudiosInd @divomusicindia @ManojMaddyMM @RIAZtheboss @parasriazahmed1 @teamaimpr
— Wunderbar Films (@wunderbarfilms) November 18, 2026
தனுஷ், சாய் பல்லவி, மம்முட்டி மற்றும் ஸ்ரீலீலா போன்ற நடிகர்கள் இணைந்து நடித்த பிரம்மாண்ட படமாக இந்த ஓ.எம் படம் உருவாக்கப்பட்டது. இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி இப்படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளது. அந்த விதத்தில் 2026ல் வெளியான படங்களில் தனுஷிற்கு இப்படம் அதிக வரவேற்பை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.