டிக்கெட் முன்பதிவை தொடங்கியது தனுஷின் ஓம் படக்குழு – வெளியானது அப்டேட்
O.M movie ticket booking open now | நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஓம். இந்தப் படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் டிக்கெட் முன்பதிவை படக்குழு தற்போது தொடங்கி உள்ளது.
உச்ச நடிகராக உள்ள நடிகர் தனுஷ் (Dhanush) நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் தொடர்ந்து திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டில் முதலாவதாக கர படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் இரண்டாவதாக இந்த 2026-ம் ஆண்டில் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஓ.எம் ஆப்ரேஷன் மோல். இந்தப் படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கி உள்ளார். மேலும் இவரது இயக்கத்தில் முன்னதாக தமிழ் சினிமாவில் வெளியான அமரன் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதே போல இந்த ஓ.எம் படமும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெறும் என்று ரசிகர்கள் அதிக அளவில் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில் இந்த ஓ.எம் ஆப்ரேஷன் மோல் என்ற படத்தில் நடிகர் மம்முட்டி முக்கிய வேடத்தில் நடித்து உள்ளார். மேலும் சாய் பல்லவி காவல்துறை அதிகாரியாகவும் நடிகை ஸ்ரீ லீலா நடிகர் தனுஷின் மனைவியாக நடித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்தப் படம் தொரபான அப்டேட்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.




டிக்கெட் முன்பதிவை தொடங்கியது தனுஷின் ஓம் படக்குழு:
இந்த நிலையில் இந்த ஓ.எம் ஆப்ரேஷன் மோல் என்ற படத்தின் வெளியீடு வருகின்ற 20-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளது. தொடர்ந்து இந்தப் படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் படத்தின் டிக்கெட் முன்பதிவை படக்குழு தற்போது தொடங்கி உள்ளது. இது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.
Also Read… அல்லகலோவா அஸ்ஸி பாவா… மேடையில் ஒன்றாக இணைந்து நடனமாடிய டான்ஸிங் குயின்ஸ் சாய் பல்லவி – ஸ்ரீலீலா!
ஓம் படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
The operation is clear – BOOK YOUR TICKETS
#OM advance bookings are NOW OPEN
BMS: https://t.co/q6sY4YxNkT
District: https://t.co/pPvVf9SXpi
The big-screen experience awaits you on November 20 💥
A @Rajkumar_KP Film
@dhanushkraja @mammukka @Sai_Pallavi92 @SaiAbhyankkar #NaseeruddinShah @sreeleela14 #Indrans @RTakeStudios @wunderbarfilms @Shra2309 @azy905 @theSreyas @sandy_sashr @vishurams @Ezhil_DOP @kalaivananoffl @iamSandy_Off @kavya_sriram @kabilanchelliah @rajeevan69 @JamRokr @kuchirayar73 @HariSounddesign @Synccinema @agscinemas @archanakalpathi @aishkalpathi @PharsFilm @SitharaEnts @WarnerMusicIN #BinuGeorgeAlexander @DreamBig_film_s @jsujithnair @PenMovies #PenMarudhar @ThinkStudiosInd @divomusicindia @ManojMaddyMM @RIAZtheboss @parasriazahmed1 @teamaimpr
— Wunderbar Films (@wunderbarfilms) November 17, 2026