AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அரசன் படத்திலிருந்து விலகிய அனிருத்.. இணைந்த புது இசையமைப்பாளர் யார் தெரியுமா?

Arasan Movie Music Director Change: வெற்றிமாறனின் இயக்கத்தில் தமிழில் மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுவரும் திரைப்படம்தான் அரசன். நடிகர் சிலம்பரசன் நடித்துவரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பதாக ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது சில காரணங்களால் அவர் விலகிவிட்டாராம். அந்த விதத்தில் புது இசையமையாளர் யார் என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

அரசன் படத்திலிருந்து விலகிய அனிருத்.. இணைந்த புது இசையமைப்பாளர் யார் தெரியுமா?
அரசன் திரைப்படம்Image Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Published: 17 Nov 2026 16:05 PM IST

தென்னிந்திய திரையுலகில் மக்களிடையே தனது திரைப்படங்கள் மூலமாக பிரபலம் பெற்றுவருபவர்தான் வெற்றிமாறன் (Director Vetri Maaran). இவரின் இயக்கத்தில் தமிழில் தனுஷ் (Dhanush) முதல் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) என பல்வேறு நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்திருக்கிறார்கள். அதிலும் நடிகர் சூரியை (Soori) படத்தில் ஹீரோவாக அறிமுகப் படுத்தியதே வெற்றிமாறன்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பல பெருமைகளை வெற்றிமாறன் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக இவரின் நடிப்பில் விடுதலை 2 படமானது 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியானது. இந்த படமானது பெரும் எதிர்பார்ப்புடன் உருவாக்கப்பட்ட நிலையில், அந்த எதிர்பார்ப்பை முழுவதுமாக பூர்த்தி செய்யவில்லை என கூறலாம். இப்படத்திற்கு பிறகு இவரின் இயக்கத்தில் தமிழில் உருவாக்கப்பட்டுவரும் திரைப்படம்தான் அரசன் (Arasan Movie).

நடிகர் சிலம்பரசன் (Silambarasan) ஹீரோவாக நடிக்கும், இதை வெற்றிமாறன் இயக்கிவரும் நிலையில், இன்னும் ஷூட்டிங் நிறைவடையவில்லை. மேலும் ரசிகர்களுக்கு அடுத்த அதிர்ச்சியாக அனிருத் இப்படத்திலிருந்து விலகிவிட்டாராம். இந்நிலையில் அதற்கான காரணம் மற்றும் புது இசையமைப்பாளர் யார் என இணையத்தில் தகவல்கள் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: ரிலீஸிற்கு மூன்று நாட்களே உள்ள ஓ.எம் படம்… புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

சிலம்பரசனின் அரசன் படத்தின் புது இசையமைப்பாளர் யார்:

சிலம்பரசனின் அரசன் திரைப்படத்திலிருந்து அனிருத் வெளியேறியதாக சமீப காலமாக இணையத்தில் தகவல்கள் வைரலாகிவந்தது. அந்த விதத்தில் அறிமுக இசையமைப்பாளர் லிடியன் நாதஸ்வரம் என்பவரை இசையமைப்பாளராக அரசன் படத்தில் இசையமைக்க பேசப்பட்டுவருகிறதாம். இயக்குநர் வெற்றிமாறன், லிடியன் நாதஸ்வரத்தை அடுத்த அனிருத்தாக நிலைநிறுத்துவதில் ஆர்வமாக இருப்பதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க: அடுத்த முறை நீங்கள் வரும்போது.. மம்முட்டியிடம் குட்டி வேண்டுகோள் வைத்த தனுஷ் – சிரித்த அரங்கம்!

மேலும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இயக்குநர் பாலா இயக்கும், வெற்றிமாறனின் அடுத்த தயாரிப்பிற்கும் லிடியன் இசையமைக்கிறார். இப்படத்திற்காக ஏற்கனவே சில பாடல்களை அவர் இசையமைத்துவிட்டதாக தகவல்கள் பரவிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசன் படத்தின் இசையமைப்பாளர் குறித்து இணையத்தில் வைரலாகிவரும் எக்ஸ் பதிவு:

சிலம்பரசன், வெற்றிமாறன் மற்றும் அனிருத் என இந்த மூவரின் கூட்டணி முதல் முறையாக அரசன் திரைப்படத்தில் இணைந்திருந்தது. அந்த விதத்தில் இப்படத்திலிருந்து அனிருத் விலகியதாக கூறப்படுகிறது. அந்த விதத்தில் புது இசையமைப்பாளரை தேடும்பனியில் படக்குழு உள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் இன்னும் முடியாத நிலையில், வெற்றிமாறன் ராஜன் வகையறா என்ற படத்தை இயக்கும் பணியிலும் தீவிரமாக இருக்கிறாராம். இந்த இரு படங்களும் ஒரே சமயத்தில் ஒன்றின் பின் ஒன்றாக வெளியாகும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Follow Us