AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இயக்குநர் சங்கரின் அந்தப் படத்தை யாஷ் 5 முறை தியேட்டரில் பார்த்துள்ளார் – தயாரிப்பாளர் சொன்ன விசயம்

Producer AM Rathnam Talks Abour Actor Yash | தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய மொழிகளில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் சங்கர். அவரது ஒரு படத்தை யாஷ் 5 முறை திரையரங்குகளில் பார்த்ததாக தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் சங்கரின் அந்தப் படத்தை யாஷ் 5 முறை தியேட்டரில் பார்த்துள்ளார் – தயாரிப்பாளர் சொன்ன விசயம்
யாஷ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 17 Nov 2026 14:55 PM IST

தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய அளவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் சங்கர் (Director Shankar). இவரது இயக்கத்தில் தமிழ் மொழியில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான இயக்குநராக வலம் வரும் இயக்குநர் சங்கரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான படங்கள் ரசிகர்களிடையே எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. மாறாக படுதோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக தற்போது வெற்றியைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இயக்குநர் சங்கர் தற்போது உள்ளது குறிப்பிடத்தக்கது. இவரின் அடுத்தடுத்த படங்களின் அப்டேட்களை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் இயக்குநர் சங்கரின் இயக்கத்தில் வெளியான ஒரு படத்தை நடிகர் யாஷ் ஐந்து முறை திரையரங்கிற்கு சென்று பார்த்ததாக தெரிவித்துள்ளார். அந்த பேட்டி தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

சங்கரின் அந்தப் படத்தை யாஷ் 5 முறை தியேட்டரில் பார்த்துள்ளார்:

தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம், இயக்குனர் ஷங்கரின் பாய்ஸ் திரைப்படம் குறித்தும், புதிய முகங்களை உள்ளடக்கிய அந்தப் படம் கன்னட சூப்பர் ஸ்டார் யாஷ் மீது ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் ஒரு ஊக்கமளிக்கும் கதையைப் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் ஒரு புதிய போக்கை உருவாக்கவே, புதிய முகங்களைக் கொண்டு பாய்ஸ் திரைப்படம் தயாரிக்கப்பட்டதாக ரத்னம் விளக்கினார். இப்படத்தில் ஆபாசமான காட்சிகள் ஏதுமற்ற நிலையிலும், சில பத்திரிகையாளர்கள் படம் வெளியாவதற்கு முன்பே அதைப் பற்றி எதிர்மறையான கருத்துகளைப் பரப்பினர். இது தமிழ்நாட்டில் படத்தின் வரவேற்பைப் பாதித்தது.

இருப்பினும், கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் இலங்கையில் இப்படம் பெரும் வெற்றி பெற்றது. பதின்ம வயதில் அறியாமல் செய்யப்படும் ஒரு சிறிய தவறு கூட, ஒருவரின் எதிர்காலத்தில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற ஆழமான கருத்தை இப்படம் கொண்டிருந்தது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். ரத்னத்தின் கூற்றுப்படி, பாய்ஸ் திரைப்படம் வெறும் இளமைத் துள்ளலான பொழுதுபோக்கு அம்சங்களைத் தாண்டி, அர்த்தமுள்ள ஒரு செய்தியையும் உள்ளடக்கியிருந்தது.

Also Read… அஜித்திற்கு வில்லனாகும் சிவராஜ்குமார்? வைரலாகும் டேர்டெவில் படத்தின் அப்டேட்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… ஒரே நேரத்தில் வெளியாகும் ஓ.எம் மற்றும் ஆகாசம்லோ ஓகா தாரா – துல்கர் சல்மான் கொடுத்த ரியாக்‌ஷன்!

Follow Us