AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

டிக்கெட் டூ ஃபினாலே பில்டப் வீக்.. ஆப்ரேஷன் ரெஸ்கியூ டாஸ்கில் அதிரடியாக பிக் பாஸ் வீடு!

BB Tamil 10 Ticket to Finale Task: பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இன்னும் இந்த நிகழ்ச்சியானது நிறைவடைவதற்கு இன்னு சில வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இந்த வாரத்தில் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் தொடங்கியுள்ளது. அதில் முதலில் நடந்த ஆப்ரேஷன் ரெஸ்கியூ டாஸ்க் குறித்த ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

டிக்கெட் டூ ஃபினாலே பில்டப் வீக்.. ஆப்ரேஷன் ரெஸ்கியூ டாஸ்கில் அதிரடியாக பிக் பாஸ் வீடு!
பிக் பாஸ் தமிழ் 10 ப்ரோமோImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 17 Nov 2026 13:49 PM IST

தமிழில் பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சி 2026 செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கிய நிலையில், சிறப்பான வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றுவருகிறது. தற்போது 10 வாரங்களை கடந்து 11வது வாரத்தில் இந்நிகழ்ச்சியானது அடியெடுத்து வைத்துள்ளது. அந்த விதத்தில் கடந்த வாரத்தில் டபுள் எவிக்ஷன் என்ற நிலையில், முத்தழகி மற்றும் அவினாஷ் உள்ளிட்ட இரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே மீதம் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியானது 72வது நாளில் உள்ள நிலையில், இன்னும் சில வாரங்களில் இந்நிகழ்ச்சியானது இறுதிக்கட்டத்தை எட்டிவிடும்.

அந்த விதத்தில் டிக்கெட் டூ ஃபினாலே-கான போட்டி சிறப்பாக ஆரம்பமாகியுள்ளது. இந்த போட்டிக்கான முதல் டாஸ்காக ஆப்ரேஷன் ரெஸ்கியூ என்ற டாஸ்க் ஆரம்பமான நிலையில், அதில் போட்டியாளர்கள் புது விதமாக காப்பாற்றியுள்ளனர்.

இதையும் படிங்க: மால டும் டும்.. மஞ்சன டும் டும்… நடிகை மிருணாளினி ரவியின் Wedding clicks!

பிக் பாஸில் அதிரடியாக தொடங்கிய ஆப்ரேஷ ரெஸ்கியூ டாஸ்க்:

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வாரமானது டிக்கெட் டூ ஃபினாலே பில்டப் வீக் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் நடக்கும் அனைத்து டாஸ்குகளிலும் யாரை வெற்றிபெறுகிறாரோ அவர் டிக்கெட் டூ ஃபினாலே-கான பாஸை வெல்வார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விதத்தில் இந்த போட்டிக்கான முதல் டாஸ்காக ஆப்ரேஷ ரெஸ்கியூ என்ற டாஸ்க் நடந்துள்ளது. இதில் போட்டியாளர்கள் தாங்கள், காப்பாற்ற நினைக்கும் சக போட்டியாளர்களை என வரிசை படி கூறவேண்டும்.

இதையும் படிங்க: டிடிஃஎப் வாசன்-ஐ வேண்டுமென்றே வம்புக்கு இழுத்த முனியம்மாள் – கோபத்தில் கொதித்தெழுந்த டிடிஃஎப் வாசன்!

அந்த விதத்தில் ஒவ்வொரு போட்டியாளர்களும், அவர்கள் சொன்ன அந்த சக போட்டியாளரின் உருவ பொம்மையை, தீப்பிடிக்க காத்திருக்கும் பேருந்திலிருந்து காப்பாற்றவேண்டும். அதுவும் குறிப்பிட்ட நேரத்திற்குள் அதை செய்து முடிக்கவேண்டும். அந்த வகையில், இந்த டாஸ்கில் அனைத்து போட்டியாளர்களும் தாங்கள் சொன்ன போட்டியாளர்களை காப்பாற்றிய நிலையில், சாதிகா அடாவடி அன்சர் பெயரை கூறிய நிலையில், அவரை அவர் காப்பாற்றவில்லை என இந்த ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 72வது நாளின் 2வது ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வாரமானது டிக்கெட் டூ ஃபினாலே வாரமாக அமைந்துள்ளது. போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் யார் இந்த டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கில் வெற்றிபெறுவார் என போட்டியிட்டு வருகிறார்கள். அந்த விதத்தில் இந்த வாரம் பிக் பாஸ் சீசன் 10 வீடு மிகவும் பயங்கரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us