AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

டிடிஃஎப் வாசன்-ஐ வேண்டுமென்றே வம்புக்கு இழுத்த முனியம்மாள் – கோபத்தில் கொதித்தெழுந்த டிடிஃஎப் வாசன்!

Bigg Boss 10 Tamil Promo: தமிழில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது ஆரம்பமாகி கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த நிகழ்ச்சியானது 72வது நாளில் இருக்கும் நிலையில், இன்று (17/11/2026) வெளியான முதல் ப்ரோமோவில் முனியம்மாள் டிடிஃஎப் வாசன்-ஐ வம்புக்கு இழுத்துள்ளார். இது தொடர்பான ப்ரோமோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

டிடிஃஎப் வாசன்-ஐ வேண்டுமென்றே வம்புக்கு இழுத்த முனியம்மாள் – கோபத்தில் கொதித்தெழுந்த டிடிஃஎப் வாசன்!
டிடிஎஃப் வாசன் மற்றும் முனியம்மாள் சண்டைImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 17 Nov 2026 10:36 AM IST

நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) சின்னத்திரை தொகுப்பாளராக தொகுத்துவரும் ரியாலிட்டி ஷோதான் பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10). இந்நிகழ்ச்சி 2026 செப்டம்பர் 6ம் தேதி முதல் தொடங்கிய நிலையில், தற்போது 11வது வாரத்திற்குள் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கடந்த இரு வாரங்களாக டபுள் எவிக்ஷன் இருந்த நிலையில், தற்போது மொத்தமாக இந்நிகழ்ச்சியில் மொத்தம் 10 போட்டியாளர்கள் மட்டுமே மீதம் உள்ளார்கள். கடந்த வாரத்தில் முத்தழகி மற்றும் அவினாஷ் இருவருமே வெளியேற்றப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 11வது வாரத்தின் தொடக்கத்திலே பிக் பாஸ் வீட்டின் கேப்டனாக தன்யா தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் தனது தலைவர் டாஸ்கை சிறப்பாக செய்துவருகிறார் என கூறலாம்.

அந்த விதத்தில் இன்று (17/11/2026) வெளியான முதல் ப்ரோமோவில், முனியம்மாள் தனது சக போட்டியாளராக டிடிஃஎப் வாசன்-ஐ வம்புக்கு இழுக்கும்படியாக் பேசியுள்ளார். இதற்கு வாசன் கோபப்பட்ட இந்த ப்ரோமோ வெளியாகி வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: நடிகர் சூர்யாவின் 48-வது படத்தின் தற்போதைய நிலை என்ன? வைரலாகும் அப்டேட்

டிடிஃஎப் வாசனிடம் வம்புக்கு இழக்கும்படி பேசிய முனியம்மாள்:

இந்த ப்ரோமோவில், “முனியம்மாள், டிடிஃஎப் வாசன்-ஐ பார்த்து சும்மா சும்மா கோபப்படுவாரு என பேசியிருந்தார். உடனே டிடிஃஎப் வாசன், “உங்க இஷ்டத்துக்குலாம் பேசாதீங்க.. நீங்க நினைக்கிறதெல்லாம் உண்மையாகிடாது என கூறியிருந்தார். மேலும் முனியம்மாள், உங்களை ஒருவர் வேண்டுமென்றே கோபப்படுத்தி உங்களை ட்ரிகெர் பண்ண வைக்கிறார்கள்.. அப்போதெல்லாம் கோபம் வராதா?” என கூறினார். உடனே வாசன், “என்னால முடியல கா.. பொய்யான குற்றம் சாட்டி கோபப்பட வைக்கிறீர்கள் அல்லவே அது எனக்கு பிடிக்கவே இல்லை கா.. அதனாலதான் கோபப்படுறேன் ” என கூறினார்.

இதையும் படிங்க: பிக்பாஸில் தர்பூசணியால் போட்டியாளர்களிடையே வெடித்த சண்டை… வைரலாகும் வீடியோ!

மேலும் முனியம்மாள், ” உங்களின் முகம் மாறும்போது.. முகம் மாறுகிறது என சொல்கிறேன் இதில் என்ன இருக்கு?” என கூறினார். உடனே டிடிஃஎப் வாசன், என்னோடஷய ரியாக்ஷன் என்னனு எனக்கு தெரியும்.. நீங்க சொல்லாதீங்க.. எனக்கு கோபம் வந்தால் எனக்கு தெரியும் என கூறினார். முனியம்மாள் நீங்கள் கோபப்படுகின்றேறேகால்.. ஆனால் அதை கட்டுப்படுத்திக்கொள்கிறீர்கள் என அதில் பேசியுள்ளார். இவ்வரும் டிடிஃஎப் வாசன்-ஐ கோபப்படுத்தும் முயற்சியில் முனியம்மாள் ஈடுபட்டுள்ள ப்ரோமோ வைரலாகிவருகிறது.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 72வது நாளின் முதல் ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:

தமிழில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது 11வது வாரத்தில் உள்ளது. இந்நிகழ்ச்சியில் தற்போது மொத்தமாகவே 10 போட்டியாளர்கள் மட்டுமே மீதம் உள்ளார்கள். இந்த வாரத்தின் எவிக்ஷனில் 8 போட்டியாளர்கள் நாமினேஷன் லிட்டில் இருகிறார்கள். தன்யா இந்த வாரத்தின் கேப்டன் என்பதால் அவர் இதில் இல்லை என கூறலாம். அந்த விதத்தில் இன்னும் சில நாட்களே இந்நிகழ்ச்சி நிறைவடைய உள்ள நிலையில், சிறப்பான டாஸ்குகள் எல்லாம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us