அக்டோபரில் 26 டன் கொள்முதல்! சீனா அதிகளவு தங்கத்தை வாங்கி இருப்பு வைப்பது ஏன்? இந்தியா எந்த இடத்தில் உள்ளது!
China Purchase Gold : சீன அரசு கடந்த அக்டோபர் மாதம் 26 டன் தங்கம் கொள்முதல் செய்துள்ளது. அதிக அளவு தங்கம் கொள்முதல் செய்து இருப்பில் வைப்பதற்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில், இந்தியா எந்த இடத்தில் உள்ளது.
சீன அரசு தனது தங்க கொள்முதலை மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் அரசின் அதிகாரப்பூர்வ கையிருப்பில் கூடுதலாக 26 டன் தங்கத்தை சேர்த்து உள்ளது. கடந்த 2023- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு இதுவே இந்த நாடு மேற்கொள்ளும் மிகப்பெரிய மாதாந்திர தங்க கொள்முதல் ஆகும். கடந்த செப்டம்பர் மாதம் 23 டன் தங்கத்தை கொள்முதல் செய்திருந்த அரசு சீன அரசு. தனது தங்க இருப்பை தொடர்ந்து அதிகரித்து வருவதை இது காட்டுகிறது. புள்ளி விவரங்களின் அடிப்படையில், தற்போது தொடர்ந்து 2 ஆண்டுகளாக தங்கம் வாங்கியுள்ளது. இதில், சுவாரஸ்யமாக, கடந்த 2025- ஆம் ஆண்டில் எந்த ஒரு மாதத்திலும் அது அதிகாரப்பூர்வமாக 5 டன்களுக்கு மேல் வாங்கவில்லை. இருப்பினும், சீனா அதிகாரப்பூர்வமற்ற வழிகளிலும் தங்கம் வாங்க கூடும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
சீன அரசின் கையிருப்பில் 129 டன் தங்கம் இருப்பு
சீனா இந்த ஆண்டு தற்போது வரை தனது கையிருப்பில் 129 டன் தங்கத்தை சேர்த்துள்ளது. அதன் மொத்த அதிகாரப்பூர்வ தங்க கையிருப்பு சுமார் 2,435 டன்களை எட்டி உள்ளது. இதன் மூலம் உலகின் 4- ஆவது பெரிய தங்க கையிருப்பை கொண்டுள்ள பிரான்சுக்கு அது நெருக்கமாக வந்துள்ளது. அதிகாரப்பூர்வ தங்க கையிருப்பு அடிப்படையில் சீனா தற்போது உலகின் 5- ஆவது இடத்தில் உள்ளது. ஏறத்தாழ 2435 டன் தங்கத்துடன் சுமார் 2437 டன் தங்கத்தை கொண்டுள்ள பிரான்ஸை முந்தி செல்லும் நிலைக்கு வந்துள்ளது.
மேலும் படிக்க: ஷேக் ஹசீனாவை நாடு கடத்த இந்தியா நிபந்தனை? மறுப்பு தெரிவித்த வங்கதேச அரசு.. நடந்தது என்ன!
அதிக தங்கம் இருப்பு வைத்துள்ள நாடுகள் விவரம்
இத்தாலி 2452 டன்களுடன் 3- ஆவது இடத்திலும், ஜெர்மனி 3350 டன்களுடன் 2- ஆவது இடத்திலும் உள்ளது. சுமார் 8133 டன்களுடன், உலகின் மிகப்பெரிய தங்க இருப்பை அமெரிக்கா தொடர்ந்து வருகிறது. அதன் கையிருப்பு மற்ற எந்த நாட்டையும் விட கணிசமான அதிகமாகும். இதனிடையே, இந்தியா சுமார் 880 டன் தங்க இருப்புடன் 8- ஆவது இடத்தில் உள்ளது. இதில்,
- ஐக்கிய அமெரிக்கா- 8133 டன் தங்க இருப்பு.
- ஜெர்மனி- 3,350 டன் தங்கம்.
- இத்தாலி- 2452 டன் தங்கம் இருப்பு.
- பிரான்ஸ்- 2,437 டன் தங்கம் இருப்பு.
- சீனா- 2435 டன் தங்கம்.
- ரஷ்யா- 2264 டன் இருப்பு தங்கம்.
- ஸ்விட்சர்லாந்து- 1040 டன் தங்கம் கையிருப்பு.
- இந்தியா – 880 டன் தங்கத்தை வைத்துள்ளது.
தங்க இருப்பை அதிகரிக்க முயலும் பெய்ஜிங்
சீனாவின் தங்க இருப்புக்கும், முன்னணி நாடுகளின் இருப்புக்கும் இடையிலான இடைவெளியை இந்தப் புள்ளி விவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. இருப்பினும், அதன் தொடர்ச்சியாக கொள்முதல், பெய்ஜிங் தனது தங்கம் இருப்பை அதிகரிக்க முயன்று வருகிறது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: பிலிப்பைன்ஸ் பாரம்பரிய உடையில் அசத்திய பிரதமர் மோடி.. ராமாயண நாட்டிய நிகழ்ச்சி முதல் பாரம்பரிய விருந்து வரை…