AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிலிப்பைன்ஸ் பாரம்பரிய உடையில் அசத்திய பிரதமர் மோடி.. ராமாயண நாட்டிய நிகழ்ச்சி முதல் பாரம்பரிய விருந்து வரை…

மணிலாவில் உள்ள பிலிப்பைன்ஸ் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற்ற இந்த விருந்தில், ஆசியான் அமைப்பின் 49-வது உச்சி மாநாடு மற்றும் அதனுடன் தொடர்புடைய கூட்டங்களில் பங்கேற்க வந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது பிரதமர் மோடி, பிலிப்பைன்ஸின் தேசிய மற்றும் பாரம்பரிய ஆண்கள் முறையான உடையான ‘பரோங் தகலாக்’ (Barong Tagalog) அணிந்திருந்தார்.

பிலிப்பைன்ஸ் பாரம்பரிய உடையில் அசத்திய பிரதமர் மோடி.. ராமாயண நாட்டிய நிகழ்ச்சி முதல் பாரம்பரிய விருந்து வரை…
பிலிப்பைன்ஸ் பாரம்பரிய உடையில் பிரதமர் மோடி..
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 16 Nov 2026 21:52 PM IST

நவம்பர் 16, 2026: பிலிப்பைன்ஸ் நாட்டுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் பெர்டினாண்ட் ஆர். மார்கோஸ் திங்கட்கிழமை ஏற்பாடு செய்திருந்த விருந்தில், பிலிப்பைன்ஸின் பாரம்பரிய உடையை அணிந்து பங்கேற்றார்.

பாரம்பரிய உடையில் பிரதமர் மோடி


மணிலாவில் உள்ள பிலிப்பைன்ஸ் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற்ற இந்த விருந்தில், ஆசியான் அமைப்பின் 49-வது உச்சி மாநாடு மற்றும் அதனுடன் தொடர்புடைய கூட்டங்களில் பங்கேற்க வந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது பிரதமர் மோடி, பிலிப்பைன்ஸின் தேசிய மற்றும் பாரம்பரிய ஆண்கள் முறையான உடையான ‘பரோங் தகலாக்’ (Barong Tagalog) அணிந்திருந்தார். பிலிப்பைன்ஸ் அதிபர் மார்கோஸ் உள்ளிட்ட தலைவர்களும் இதே பாரம்பரிய உடையை அணிந்திருந்தனர்.

பிரதமர் மோடி நவம்பர் 15 முதல் 17ஆம் தேதி வரை மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக மணிலா சென்றுள்ளார். இந்தப் பயணத்தின்போது 23-வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாடு மற்றும் 21-வது கிழக்காசிய உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கிறார்.

மேலும் படிக்க: இந்தியா வரும் பிரிட்டன் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட்.. எர்த்ஷாட் பரிசு வழங்கும் விழாவில் பங்கேற்பு

இந்திய வம்சாவளியினரை சந்தித்த பிரதமர் மோடி

மணிலா சர்வதேச விமான நிலையம் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு, அங்கிருந்த இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களுடன் கைகுலுக்கி உரையாடிய மோடி, பின்னர் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளையும் கண்டு ரசித்தார்.

தொடர்ந்து, இலிகன் நகரைச் சேர்ந்த ஒருங்கிணைந்த நிகழ்த்துக் கலைக் குழுவினர் நடத்திய ‘சீதா: ராமாயணம் மறுபார்வை’ (Sita: The Ramayana Revisited) என்ற சிறப்பு நாடக நிகழ்ச்சியைப் பார்வையிட்டார். மேலும், இந்திய மற்றும் பிலிப்பைன்ஸ் வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீ சத்ய சாய் பள்ளி மாணவர்கள் வழங்கிய பூர்ண கும்ப ஸ்லோகத்தையும் கேட்டார்.

மேலும் படிக்க: புவி வெப்பமயமாதல் தீவிரமடையும் நிலையிலும் சில நகரங்கள் குளிர்ச்சியடைவது ஏன்? .. வியக்க வைக்கும் அறிவியல் ஆய்வின் பின்னணி!!

ஆசியான் மாநாட்டில் இந்தியாவின் முக்கிய நோக்கம்!

இந்தப் பயணத்தில் ஆசியான்-இந்தியா மற்றும் கிழக்காசிய உச்சி மாநாடுகளில் பங்கேற்கும் பிரதமர், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு மற்றும் கடற்படை ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்க உள்ளார்.

இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ஆசியான் அமைப்பு, இந்தியாவின் கிழக்கு நோக்கிய செயல்பாட்டுக் கொள்கையில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆசியாவில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே இந்த மாநாடுகளில் இந்தியாவின் முக்கிய நோக்கமாக இருக்கும் என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

 

Follow Us