AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஒரே இடத்தில் புல்லட் ரயில் & சாதாரண ரயில்.. அகமதாபாத்தில் புதிய நடைமேடைகள் ரெடி.. முழு விவரம்!

Ahmedabad 3 New Platforms : அகமதாபாத்தில் புல்லட் ரயில் நிலையத்தின் கீழ் 3 ரயில் நடைமேடைகள் கட்டமைக்கப்பட்டு பயன்பாட்டுக்காக தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து வகையான ரயில்களும் இந்த தடத்தில் இயக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது .

ஒரே இடத்தில் புல்லட் ரயில் & சாதாரண ரயில்.. அகமதாபாத்தில் புதிய நடைமேடைகள் ரெடி.. முழு விவரம்!
கோப்புப்படம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 16 Nov 2026 21:59 PM IST

குஜராத் மாநிலம், அகமதாபாத் ரயில் நிலையத்தில் 3 புதிய நடைமேடைகள் கட்டும் பணிகள் முடிவடைந்துள்ளது. இந்த நடைமேடைகள் 10, 11, 12 ஆகியவை அகமதாபாத் ரயில் நிலையத்தில் நடைபெறும் மறு சீரமைப்பு மற்றும் யார்டு மறு வடிவமைப்பு பணிகளின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நடை மேடைகளுக்காக எண் 16, 17, 18 ஆகிய 3 புதிய அகல பாதை தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் வழித்தடங்களில் பாதுகாப்பு ஆய்வை மேற்கொண்டுள்ளார். தேவையான பாதுகாப்பு அனுமதி மற்றும் பிற நடைமுறைகள் முடிவடைந்த பின்னர் பயணிகள் ரயில் சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை டூ அகமதாபாத் அதிவேக ரயில் திட்டம் மான கட்டுமான பணிகள் காரணமாக 10- ஆம் நடைமேடை கடந்த ஜூலை 2022 முதல் மூடப்பட்டது.

புதிய நடைமேடையில் எக்ஸ்பிரஸ், வந்தேபாரத், உள்ளூர் ரயில்கள் சேவை

இந்த புதிய நடைமேடைகள் செயல்பாட்டுக்கு வந்தவுடன், அவற்றால் எக்ஸ்பிரஸ், வந்தே பாரத், உள்ளூர் பயணிகள் ரயில்கள் ஆகியவை இயக்க முடியும். இதன் மூலமாக, அகமதாபாத் ரயில் நிலையத்தில் அதிக ரயில்கள் மற்றும் பயணிகள் வந்து செல்ல முடியும். மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா, அகமதாபாத் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளையும், கட்டுமானத்தில் உள்ள அகமதாபாத் புல்லட் ரயில் நிலையத்தையும் ஆய்வு மேற்கொண்டார். இந்தப் பயணத்தின் போது, அவர் இரு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து மதிப்பாய்வு செய்ததுடன், கட்டுமானப் பணிகள், பயணிகளுக்கான வசதிகள், திட்டங்கள் குறித்து விளக்கினார்.

மேலும் படிக்க: இந்தியா வரும் பிரிட்டன் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட்.. எர்த்ஷாட் பரிசு வழங்கும் விழாவில் பங்கேற்பு

38 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் ரயில் நிலையம்

மகாத்மா காந்தி உயர் சேவை திட்டத்தின் ஒரு பகுதியாக அகமதாபாத் புல்லட் ரயில் நிலையம் உருவாக்கப்பட்டு வருகிறது. சுமார் 38000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ரயில் நிலையம், தற்போது உள்ள அகமதாபாத் ரயில் நிலையத்தின் 10,11,12 நடைமுறைகளுக்கு மேலே கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையத்தில் 2 நடைமேடைகள். இதன், கட்டிடக்கலை வடிவமைப்பு அகமதாபாத்தின் கலாச்சார பாரம்பரியத்தில் இருந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது. கூரையின் வடிவமைப்பு, வெளிப்புற வடிவமைப்பு பல்வேறு வேலைபாடுகளுடன் தொடர்புடையதாகும்.

ரயில் நிலையத்தில் என்னென்ன அம்சங்கள் உள்ளன

இந்த ரயில் நிலையத்தில்

  • நவீன காத்திருப்பு அறைகள்.
  • சில்லறை விற்பனை நிலையங்கள்.
  • கழிவறைகள்.
  • நகரும் படிக்கட்டுகள்.
  • மின் தூக்கிகள்.
  • நவீன கண்காணிப்பு கேமராக்கள்.
  • இலவச இணையதள வசதி.

உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளிட்டவை இடம் பெற உள்ளது. மேலும், இந்த ரயில் நிலையம் மற்றும் கலுபூர் மெட்ரோ ரயில் நிலையத்துடன் இணைக்கப்படும் என்று ரயில்வே துறை இணை அமைச்சர் சோமண்ணா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: குழந்தைகளின் கையில் ஸ்மார்ட்போன்.. அதிகரிக்கும் டிஜிட்டல் அடிமைத்தனம் – எச்சரிக்கும் ஆய்வுகள்!

Follow Us