AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மத்திய நிதியமைச்சரின் பெயரில் ஏஐ வீடியோ மூலம் ரூ.3 லட்சம் மோசடி: வங்கி மேலாளரால் தெரியவந்த உண்மை

Nirmala Sitharaman AI Video Scam : கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே வடகராவில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பெயரைப் பயன்படுத்தி நிதி மோசடி ஒன்று நடந்துள்ளது. மோசடி கும்பல், மத்திய அமைச்சரின் காணொளியைக் காட்டி முதிய தம்பதியினரிடமிருந்து ரூ. 3 லட்சம் வரை பணத்தைப் பறித்துள்ளது.

மத்திய நிதியமைச்சரின் பெயரில் ஏஐ வீடியோ மூலம் ரூ.3 லட்சம் மோசடி: வங்கி மேலாளரால் தெரியவந்த உண்மை
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 14 Nov 2026 19:08 PM IST

முதலீடு செய்யும் பணத்தை இருமடங்காகத் தருவதாகக் கூறி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  பெயரில் (Nirmala Sitharaman) ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட காணொளியை பயன்படுத்தி வயதான தம்பதியிடம் மோசடி அரங்கேற்றப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வரும் ஓய்வுபெற்ற தம்பதியினர் ஆவர். சமூக ஊடகங்களில் முதலீட்டை இருமடங்காக்குவதாக விளம்பரம் செய்த மோசடிக் கும்பல், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் ஏஐ காணொளியைப் பயன்படுத்தியுள்ளது

மத்திய அமைச்சரின் பெயரில் ஏஐ வீடியோ மூலம் ரூ.3 லட்சம் மோசடி

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே வடகராவில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பெயரைப் பயன்படுத்தி நிதி மோசடி ஒன்று நடந்துள்ளது. மோசடி கும்பல், மத்திய அமைச்சரின் காணொளியைக் காட்டி முதிய தம்பதியினரிடமிருந்து பணத்தைப் பறித்துள்ளது. இதில் அந்தத் தம்பதியினர் ரூ.3 லட்சத்தை இழந்துள்ளனர். முதலீட்டாளர்களுக்குப் பணத்தை இருமடங்காகத் தருவதாகக் கூறி, மத்திய அமைச்சரின் ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட காணொளியை இந்த மோசடிக்கு அவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

இதையும் படிக்க : இந்தியாவின் முதல் எல்இடி டோம் கோளரங்கம்.. மைசூருவில் திறந்து வைத்த பிரதமர் மோடி.. என்னென்ன சிறப்பம்சங்கள்?

பாதிக்கப்பட்டவர்கள் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வரும் ஓய்வுபெற்ற தம்பதியினர். தங்கள் மோசடிக்கு நம்பகத்தன்மையை ஏற்படுத்த, சமூக ஊடகங்களில் முதலீட்டை இருமடங்காக்குவதாக விளம்பரம் செய்த அந்தக் கும்பல், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் ஏஐ காணொளிகளைப் பயன்படுத்தியுள்ளது.

மோசடி கும்பல் முதலில் அந்தத் தம்பதியினரின் நம்பிக்கையைப் பெறுவதற்காக, அவர்களிடம் ஒரு சிறிய தொகையைப் பெற்றுக்கொண்டு, அதற்குப் பதிலாக இருமடங்கு பணத்தைத் திருப்பிக் கொடுத்தது. அதன் பிறகு, அவர்களிடம் jt.3 லட்சம் கேட்டுப் பெறப்பட்டது. மீண்டும் அவர்கள் ரூ.7 லட்சம் கேட்டபோது, ​​அந்தத் தம்பதியினர் பணத்தை எடுப்பதற்காக வங்கிக்குச் சென்றனர். அங்கு வங்கி ஊழியர்கள் பணத்தை எடுப்பதற்கான காரணத்தைக் கேட்டபோதுதான், இது ஒரு மோசடி என்பது தெரியவந்தது.

ஆரம்பகட்ட விசாரணையில், இந்த மோசடியின் பின்னணியில் இருந்த நபர்கள் குறித்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. மேலும், தங்கள் மோசடி அம்பலமானதும், அந்தக் கும்பலைச் சேர்ந்த யாரும் அந்தத் தம்பதியினரை மீண்டும் தொடர்பு கொள்ளவில்லை. இதற்கிடையில், இழந்த பணத்தை மீட்பதற்காக, புலனாய்வுக் குழுவினர் தற்போது மேம்பட்ட அறிவியல் பூர்வமான முறைகளைப் பயன்படுத்தி விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.

முதல்வர் விஜய் பெயரில் ஏஐ வீடியோ உருவாக்கி மோசடி

முன்னதாக தமிழ்நாடு முதல்வர் விஜய் பெயரில் போலி ஏஐ’டீப் ஃபேக்’மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அப்பாவி பொதுமக்களை ஏமாற்றும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த வீடியோக்கள் ஃபேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் பரப்பப்பட்டுள்ளன. அந்த வீடியோக்களில், நிதி உதவி பெற ஒரு வாட்ஸ்அப் எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம் கேட்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட தனி அறிக்கையின் அடிப்படையில், சிபிசிஐடி சைபர் க்ரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கினர். .

மோசடி செய்பவர்கள் இந்த ஏஐ வீடியோக்களைப் பயன்படுத்தி மத்தியப் பிரதேசம் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பலரை ஏமாற்றியுள்ளது விசாரணையில் தெரியவந்தது. இந்த டீப் ஃபேக் ஏஐ வீடியோக்களை நீக்கியதுடன், சேவை வழங்குநரிடமிருந்து தகவல்களைப் பெற்ற சிபிசிஐடி, டிஜிட்டல் ஆதாரங்களை விரிவாக ஆய்வு செய்து, ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் சந்தேக நபர்கள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டன.

இதையும் படிக்க : காதலனை தீர்த்துக்கட்ட திட்டமிட்ட காதலி.. காரில் கடத்தி கொடூர தாக்குதல்.. 5 பேர் அதிரடி கைது!!

அதனைத் தொடர்ந்து, சிபிசிஐடி உயரதிகாரிகளின் மேற்பார்வையில் பல்வேறு தொழில்நுட்ப ஆய்வுகள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான காவல் ஒருங்கிணைப்பு மூலம் கைது நடவடிக்கை திட்டமிடப்பட்டு குற்றவாளியைக் கண்டுபிடிக்க ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்திற்கு 2 தனிப்படைகள் அனுப்பி வைக்கப்பட்டன. ராஜஸ்தான் காவல்துறையின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு. முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஜஹூர் கானின் மகன் ஷயாபு கான் (28) என்பவர் ஆல்வார் மாவட்டத்தின் உட்பகுதியில் கைது செய்யப்பட்டார்.

Follow Us